காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய நடைமேடை விரிவாக்கப் பணிகள் தொடர்பாக, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, காயல்பட்டினம் நகர அதிமுகவினர் சார்பில் பின்வருமாறு சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது:-
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. ஊரார் வீட்டு கோழியை அறுத்து உம்மா பெயரில் பாத்திஹா ஓதின கதையாக இருக்கிறது. posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்)[13 August 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36374
நமதூரில் ஒரு சொல் வழக்கு உண்டு."ஊரார் வீட்டு கோழியை அறுத்து உம்மா பெயரில் பாத்திஹா ஓதினார்" என்று. அதை போல், நமதூர் ரயில் நிலைய நடைமேடை விரிவாக்க முயற்சிக்கு, சிறு துரும்பையும் எடுத்து போடாமல், முஸ்லிம் லீக் கட்சியினரின் ஒருங்கிணைப்பில், சர்வ கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினரின் கூட்டு முயற்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் கிடைத்த பலனுக்கு, இவர்கள் (அதிமுகவினர்) தங்களுக்கு தாங்களே நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள். வேடிக்கையாக உள்ளது.
மக்களின் ஞாபக சக்தி மீது இவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. 'முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக' உள்ளது இவர்களின் இந்த சுவரொட்டி .
காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடை விரிவாக்கம் பற்றிய நிகழ்வுகளை மக்கள் தெரிந்து கொண்டால், இந்த அதிமுகவினர் மக்களை எந்தளவுக்கு முட்டாள்களாக எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியும்.
இதுவரை நடந்த முயற்சிகளில், அதிமுக பிரதிநிதிகள் கலந்து கொள்ளவே இல்லை. அதற்கு இந்த இணையத்தில் வந்த செய்திகளே சாட்சி.
1) பிப்ரவரி 5, 2014, அன்று வெளியான, "காயல்பட்டினம் ரயில் மறியல் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சியினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை!" (News ID # 12960), இதில் கலந்து கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பட்டியலில், அதிமுகவினர் யாரும் இல்லை.
2) , பிப்ரவரி 21, 2014 அன்று வெளியான "நிலுவைப் பணிகளை நிறைவேற்றிட ரயில்வே துறை எழுத்துப்பூர்வமாக இசைவு! ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!! (பிரசுரம் இணைக்கப்பட்டது!)" (News ID # 13076).இதில் கலந்து கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பட்டியலிலும் அதிமுகவினர் யாரும் இல்லை.
முத்தாய்ப்பாக, இந்த விரிவாக்கத்துக்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு குறித்த இந்த இணையத்தின் செய்தி மிக முக்கியமானது.
3) ஜுலை 23, 2014 ஆண்டு வெளியான, "காயல்பட்டினம் ரயில் நிலையைப் பணிகள் குறித்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு விபரம்!" (News ID # 14165). இந்த செய்தியில் எப்போது டெண்டர் விடப்பட்டது என்ற விபரம் உள்ளது. அதன்படி, மார்ச் 10 அன்று டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு. அறிவிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள், ஏப்ரல் 4 அன்று திறக்கப்படும் என்று உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற்று மே 16-ம் தேதி முடிவுகள் வெளியானது. அதன் பின்னரே அதிமுகவின் திரு.நட்டர்ஜி அவர்கள் நமது நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார். ஆனால் அதற்கு முன்பே, இந்த ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுவிட்டது. இந்த விரிவாக்க முயற்சியில் இவரின் பங்கு எங்கிருக்கிறது?
மேலும், இந்த முயற்சிகள் நடக்கும் போது, திரு. சண்முகநாதன் மற்றும் அந்த கட்சியின், நம் நகர்மன்ற தலைவியும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
உண்மை இப்படி இருக்க, எந்த முகத்தை வைத்துக் கொண்டு இப்படி சுவரொட்டி ஒட்டினார்கள்? என்று தெரியவில்லை.
3. Re:...சில நேரங்களில் ... சில மனிதர்கள் posted byA.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA)[13 August 2014] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36379
இதை படிக்கும் போது நாம் சிறு வயதில் நமது பள்ளி கூடத்தில் படித்த ஒரு சிரிப்பு கதை நினைவுக்கு வருகிறது
ஒரு பனை மரத்தில் காக்கை உட்காரும் சமயம் , அந்த பனை மரத்தில் இருந்து ஒரு பெரிய பனங்காய் கீழே விழுந்ததாம் , அதை பார்த்த அந்த காக்கை , அஹா .... நாம் வந்து உட்காரும் போது நமது பாரம் தாங்காமல் இந்த பனங்காய் கீழே விழுகிறதே என்று தன்னை நினைத்து தனக்கு தானே மிகவும் பெருமை பட்டதாம் ......
பாவம் அந்த காக்கை அறிய வில்லை .......
தன்னால் அந்த பனங்காய் தன்னால் கீழே விழவில்லை ... அந்த பனங்காய் கீழே விழும் நேரம் தான் ... நாம் இந்த பனை மரத்தில் வந்து உட்காருகிறோம் என்று .....
4. அரசியல் அண்டப்புளுகு! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் . (yanbu)[13 August 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36380
இது மட்டுமா எத்தனையோ திட்டங்கள் முடிவுறும் தருவாயில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு,ஆரம்ப அடிக்கல் நட்டியதிலிருந்து நிறைவுபெற்றது வரை அம்மாவின் சாதனையால் உழைப்பால் விளைந்தது என்ற எத்தனையோ விளம்பரங்களை கேட்டும், பார்த்தும் புளித்துப்போன காதுக்கும்,கண்ணுக்கும் சொந்தக்காரர்கள்தான் நாம்!
பல ஆண்டாய் நாம் வலியுறுத்திவந்த முஸ்லிம்களுக்கு
தனி இடஒதிக்கீடு உதவியை கலைஞர் தன் ஆட்சியில் நிறைவேற்றினார்.அதற்க்கு பல முஸ்லிம் இயக்கங்களும்
பல லட்சக்கணக்கான முஸ்லிம்களை சென்னையில் திரட்டி கலைஞருக்கு நன்றி தெரிவித்த சம்பவம் இந்த நாடே அறியும்.ஆனால் அம்மாவோ தேர்தல் பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு நான்தான் இடஒதிக்கீடு வழங்கினேன் என்று வாய் கூசாமல் பொய்பேசிய தலைவியின் தொண்டர்களுக்கும் முரட்டு பக்தர்களுக்கும் ,பக்திகளுக்கும் இந்த ஒருபொய் சுவரொட்டியெல்லாம் சர்வ சாதாரண சகஜமப்பா!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அரசியல் அண்டப்புளுகை அழகாக ரசிக்கும்,
ஆதம் சுல்தான் .
5. Re:...அரசியல்லே,,இதல்லாம் சர்வ சாதாரணமப்பா...! posted byomer anas (DOHA QATAR.)[13 August 2014] IP: 37.*.*.* | Comment Reference Number: 36382
அப்ப,,இது அம்மா ரயில் மேடையா,,?என்னவோ போங்க,,,நாங்க, gulf நாட்டுலே கஷ்ட்டமான வேலைகளை பார்த்து விட்டு வந்து நெட்ட தொறந்தா,,இது போன்ற ஜோக் செய்திகள போட்டு எங்கள வயுறு வலிக்க சிரிக்க வக்கிறீங்க போங்க!
அம்மா அம்மா வேலங்குச்சியிலே அம்மா,மிஸ்வாக் பசை கொண்டு,அம்மா கை கொண்டு பல்துலக்கியவண்ணம்,
உங்கள் ,,,,,உமர் அனஸ்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross