காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவின் வடமுனையில், ஆறாம்பள்ளித் தெரு, குறுக்கத் தெரு, கி.மு.கச்சேரி தெரு ஆகிய தெருக்களை அணைத்தாற்போல் அமைந்துள்ளது காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளிவாசல்.
நிர்வாகம்:
இப்பள்ளியின் தலைவராக ஹாஜி எஸ்.ஏ.கே.மஹ்மூத் நெய்னா, செயலாளராக எம்.ஏ.மஹ்மூத் என்ற பட்டறை மஹ்மூத் ஆகியோரும், 23 செயற்குழு உறுப்பினர்களும் சேவையாற்றி வருகின்றனர்.
இமாம் - பிலால்:
பள்ளியின் இமாமாக மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஹாஃபிழ் வி.எஸ்.ஏ.முஹம்மத் அப்துல் காதிர் தலைமை இமாமாகவும், மவ்லவீ எம்.இசட்.முஹம்மத் அப்துல் காதிர் மஸ்லஹீ துணை இமாமாகவும் பணியாற்றி வருகின்றனர். பிலால் பொறுப்பை இவ்விருவரும் பகிர்ந்து செய்து வருகின்றனர்.
நடப்பாண்டு ரமழான் தராவீஹ் தொழுகையையும் இவ்விருவருமே இணைந்து வழிநடத்தினர். ரமழானில் இஷா தொழுகை 20.45 மணிக்கும், தராவீஹ் தொழுகை 21.00 மணிக்கும் நடைபெற்றன.
நோன்புக் கஞ்சி:
நடப்பாண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு, இப்பள்ளியில், நாள்தோறும் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டது. கஞ்சி தயாரிப்பிற்கென பள்ளி வளாகத்தில் மேற்கூரை அமைக்கப்பட்ட தனி இடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்டது.
நாள்தோறும் தயாரிக்கப்படும் நோன்புக் கஞ்சியை 150 முதல் 200 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர்.
இஃப்தார் - நோன்பு துறப்பு:
நாள்தோறும் இப்பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் சுமார் 50 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், வடை வகைகள், குளிர்பான வகைகள் உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.
இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்:
10.07.2014 அன்று இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின் படப்பதிவுகள் வருமாறு:-
காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் வரலாறு உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் நகர பள்ளிகளில் நடப்பாண்டு இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டமை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |