சூரியனை பூமி சுற்றுகிறது! பூமியை சந்திரன் சுற்றுகிறது!! சூரியனை பூமி சுற்றுவதும், பூமியை சந்திரன் சுற்றுவதும் - வட்ட வடிவில் (CIRCULAR)
இல்லாமல், நீள் வட்ட வடிவில் (ELLIPTICAL) இருக்கும்.
இதனால் சில நேரங்களில் சூரியனை சுற்றும் பூமி - சூரியனுக்கு மிக அருகாமையிலும், சில நேரங்களில் சூரியனுக்கு மிக தூரத்திலும் இருக்கும்.
அது போல - பூமியை சுற்றும் சந்திரன் சில நேரங்களில் - பூமிக்கு மிக அருகாமையிலும், சில நேரங்களில் பூமிக்கு மிக தூரத்திலும் இருக்கும்.
சுமார் 365 தினங்கள் எடுக்கும் சுழற்சியில் - சூரியனுக்கு மிக அருகாமையில் பூமி வருவதை PERIHELION என்று விஞ்ஞானிகள் கூறுவர்.
சூரியனுக்கு தூரத்தில் பூமி இருப்பதை APHELION என்று விஞ்ஞானிகள் கூறுவர். இது பள்ளிகூடங்களில் பலரும் படித்த / படிக்கும் புவியியல் பாடம்.
பூமி - சூரியனுக்கு மிக அருகாமை தூரத்தை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் அடைகிறது (ஜனவரி 4, 2014; ஜனவரி 4, 2015;
ஜனவரி 2, 2016). பூமி - சூரியனுக்கு மிக தூரமான தூரத்தை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் வாரத்தில் அடைகிறது (ஜூலை 4, 2014;
ஜூலை 6, 2015; ஜூலை 4, 2016).
மேலே வழங்கப்பட்ட தகவலில் இருந்து - குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் தான் (ஜனவரி முதல்வாரம், ஜூலை முதல் வாரம்) - சூரியனுக்கு - மிக
அருகாமையிலோ, மிக தூரத்திலோ பூமி இருக்கும் என்பது தெளிவாக தெரியும். ஆனால் சந்திரன் அது போன்று அல்ல.
2014 ம் ஆண்டு, சந்திரன் - பூமிக்கு மிக நெருங்கி இருக்கும் நாளும் (PERIGEE), மிக தூரத்தில் இருக்கும் நாளும் (APOGEE) கீழே
வழங்கப்பட்டுள்ளது.
சராசரியாக மிக அருகாமை தூரம் (PERIGEE) 3,56,000 கிலோமீட்டர் என்றும், மிக விலகிய தூரம் (APOGEE) 4,07,000 கிலோமீட்டர் தூரம் என்றும்
இருக்கும். அதாவது - பூமிக்கு, தனது அதிக விலகிய தூரத்தை விட, சில நாட்களில் 50,000 கிலோமீட்டர் வரை நெருங்கி - சந்திரன் இருக்கும்.
மேலே உள்ள படத்தில் - 2014ம் ஆண்டு, தனது சுமார் 29 நாட்களுக்கு ஒரு முறையிலான சுழற்சியில் - எந்தெந்த நாட்களில், பூமிக்கு மிக
அருகாமையில் சந்திரன் வரும் (PERIGEE) என்ற நாளும், நேரமும், தூரமும், எந்தெந்த நாட்களில், பூமிக்கு மிக விலகிய தூரத்தில் சந்திரன் இருக்கும்
(APOGEE) என்ற நாளும், நேரமும், தூரமும் வழங்கப்பட்டுள்ளது.
சூரியன் - பூமி மிக அருகாமை (PERIHELION), வெகு தூரம் (APHELION) தேதிகள் வெகுவாக மாறாவிட்டாலும் (ஜனவரி முதல் வாரம், ஜூலை
முதல் வாரம்), பூமி - சந்திரன் மிக அருகாமை (PERIGEE), வெகு விலகிய தூரம் (APOGEE) தேதிகள் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ஆண்டும் வேறுபடும்.
மேலே படத்தில் உள்ள புள்ளிவிபரத்தை உன்னிப்பாக கவனித்தால் - பூமிக்கு மிக அருகாமையில் சந்திரன் வருவதற்கும் (PERIGEE), மிக தூரம் விலகி
இருப்பதற்கும் (APOGEE) - அமாவாசை தினங்களுக்கும், பௌர்ணமி தினங்களுக்கும் பொதுவாக தொடர்பு இல்லை என காணலாம். பூமிக்கு
அருகாமையிலோ, தூரத்திலோ சந்திரன் வரும் நிகழ்வுகள் - அமாவசை அல்லது பௌர்ணமி தினங்களுக்கு - சில நிமிடங்கள் முதல் பல நாட்கள்
வரை முன்னரோ, பின்னரோ நடக்கலாம்.
உதாரணமாக - ஏப்ரல் 29 அன்று இங்கிலாந்து நேரம் காலை 6:14 மணிக்கு அமாவாசை. ஆனால் ஏப்ரல் 23 அன்று - அதாவது அமாவசை நிகழ
சுமார் 6 நாட்களுக்கு முன்னரே, சந்திரன் - தன் சுழற்சியில் பூமிக்கு மிக அருகில் வந்து விடுகிறது என்பதை காணலாம்.
பூமிக்கு மிக அருகில் சந்திரன் வரும் போது - சந்திரனின் சுற்று வேகம் (ORBITAL SPEED) அதிகரிக்கும். பூமிக்கு மிக தூரத்தில் சந்திரன் இருக்கும்
போது - சந்திரனின் சுற்று வேகம் (ORBITAL SPEED) குறையும். இது சூரியனை சுற்றும் பூமிக்கும் பொருந்தும்.
இந்த இரண்டு விஞ்ஞானப்பூர்வமான உண்மைகளில் இருந்து சந்திரன்/அமாவாசை அடிப்படையிலான மாதங்கள் துவங்கி - சந்திரனின் ஆரம்ப சில நாட்களின் ஓட்டத்தை வைத்து, அம்மாதத்தின் மொத்த
நாட்களின் எண்ணிக்கையை (29ஆ, 30ஆ) கூறிவிடலாம் என்ற கருத்து விஞ்ஞானப்பூர்வமானது அல்ல என்பதை உணரலாம்.
ஒரு சில நாட்களில் - பூமிக்கு மிக அருகில் (PERIGEE) / விலகிய தூரத்தில் (APOGEE) சந்திரன் வரும் நேரமும், அமாவாசை - பௌர்ணமி
ஆகியவை ஏற்படும் நேரமும், (நாட்கள் என அல்லாமல்) - சில நிமிடங்கள் தான் வேறுபடும். அப்போதைய சந்திரனை - SUPER MOON (perigee-syzygy) என்றும், MICRO MOON (apogee-syzygy) என்றும் கூறுவர்.
2014ம் ஆண்டு - மூன்று தினங்களில் - பௌர்ணமி நேரும் நேரமும், பூமிக்கு மிக அருகாமையில் சந்திரன் வரும் நேரமும் (PERIGEE) - சில மணி
நேரங்கள் மட்டும் வேறுபடுகிறது.
ஜூலை 13 அன்று பூமியில் இருந்து 3,58,258 கிலோமீட்டர் தூரத்தில் தான் சந்திரன் இருந்தது. மேலும் பௌர்ணமி ஏற்பட்டு 21 மணி நேரம் கழித்து
தான் இது நடைபெற்றது.
இது போல செப்டம்பர் 8 அன்று 3,58,387 கிலோமீட்டர் தான் சந்திரன் இருக்கும். மேலும் பௌர்ணமி ஏற்பட இன்னும் 22 மணி நேரம்
இருக்கும்.
இந்த இரண்டு தினங்களையும் SUPER MOON தினங்கள் எனக்கூறுவர். இந்த இரண்டு தினங்களுக்கு நடுவே - இன்றிரவு 11:14 மணிக்கு, பௌர்ணமி
நிகழ 27 நிமிடங்களுக்கு முன்னர் - சந்திரன் பூமியில் இருந்து 3,56,896 கிலோ மீட்டர் தூரத்தில் (Perigee Syzgy/Super Moon) தான் இருக்கும்.
இது தான் இவ்வாண்டு சந்திரன் பூமிக்கு மிக அருகாமையில் வரும் தூரமாகும். இன்று இந்திய நேரம் இரவு 11:41 மணிக்கு - பௌர்ணமி நிகழ்கிறது.
காயல்பட்டினத்தில் இன்று சந்திரன் உதயம் மாலை 6:12 மணிக்கு நிகழ்கிறது. சந்திரன் உதிக்கும் காட்சியையும், சந்திரன் மிக அருகாமை
தூரத்தை இன்றடையும் நேரமான (இன்றிரவு) 11:14 மணிக்கு சந்திரனை புகைப்படம் எடுத்த காட்சியையும், பௌர்ணமி நேரமான (இன்றிரவு) 11:41
மணி சந்திரனை புகைப்படம் எடுத்த காட்சியையும் - காயல்பட்டணம்.காம் இணையதள வாசகர்கள் - பேசும் படம் பகுதிக்கு
(editorial@kayalpatnam.com) அனுப்பித்தரும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
கீழ்க்காணும் நகரங்களில் இன்று சந்திரன் உதிக்கும் நேரமும், பௌர்ணமி நேரத்தை அடையும் நேரமும், பூமிக்கு மிக அருகாமை தூரத்தை அடையும்
நேரமும் - உள்ளூர் நேரப்படி - வழங்கப்பட்டுள்ளது. இவ்வூர்களில் வாழும் காயலர்களும் இந்நேரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை
இணையதளத்திற்கு அனுப்பலாம்.
சிட்னி...
சந்திரன் உதயம் - 6:05 pm
பௌர்ணமி நேரம் - 4:11 am (ஆகஸ்ட் 11)
சந்திரன் பூமி அருகாமை தூரம் - 3:44 am (ஆகஸ்ட் 11)
பெர்த்...
சந்திரன் உதயம் - 5:25 pm
பௌர்ணமி நேரம் - 2:11 am (ஆகஸ்ட் 11)
சந்திரன் பூமி அருகாமை தூரம் - 1:44 am (ஆகஸ்ட் 11)
ஹாங்காங்...
சந்திரன் உதயம் - 6:26 pm
பௌர்ணமி நேரம் - 2:11 am (ஆகஸ்ட் 11)
சந்திரன் பூமி அருகாமை தூரம் - 1:44 am (ஆகஸ்ட் 11)
கொழும்பு...
சந்திரன் உதயம் - 6:04 pm
பௌர்ணமி நேரம் - 11:41 pm
சந்திரன் பூமி அருகாமை தூரம் - 11:14 pm
சென்னை...
சந்திரன் உதயம் - 6:08 pm
பௌர்ணமி நேரம் - 11:41 pm
சந்திரன் பூமி அருகாமை தூரம் - 11:14 pm
கொல்கத்தா...
சந்திரன் உதயம் - 5:44 pm
பௌர்ணமி நேரம் - 11:41 pm
சந்திரன் பூமி அருகாமை தூரம் - 11:14 pm
மும்பை...
சந்திரன் உதயம் - 6:44 pm
பௌர்ணமி நேரம் - 11:41 pm
சந்திரன் பூமி அருகாமை தூரம் - 11:14 pm
திருவனந்தபுரம்...
சந்திரன் உதயம் - 6:17 pm
பௌர்ணமி நேரம் - 11:41 pm
சந்திரன் பூமி அருகாமை தூரம் - 11:14 pm
ஹைதராபாத்...
சந்திரன் உதயம் - 6:19 pm
பௌர்ணமி நேரம் - 11:41 pm
சந்திரன் பூமி அருகாமை தூரம் - 11:14 pm
பெங்களூர்...
சந்திரன் உதயம் - 6:19 pm
பௌர்ணமி நேரம் - 11:41 pm
சந்திரன் பூமி அருகாமை தூரம் - 11:14 pm
மஸ்கட்...
சந்திரன் உதயம் - 6:18 pm
பௌர்ணமி நேரம் - 10:11 pm
சந்திரன் பூமி அருகாமை தூரம் - 9:44 pm
துபாய்...
சந்திரன் உதயம் - 6:33 pm
பௌர்ணமி நேரம் - 10:11 pm
சந்திரன் பூமி அருகாமை தூரம் - 9:44 pm
அபுதாபி...
சந்திரன் உதயம் - 6:36 pm
பௌர்ணமி நேரம் - 10:11 pm
சந்திரன் பூமி அருகாமை தூரம் - 9:44 pm
தோஹா...
சந்திரன் உதயம் - 5:49 pm
பௌர்ணமி நேரம் - 9:11 pm
சந்திரன் பூமி அருகாமை தூரம் - 8:44 pm
தமாம்...
சந்திரன் உதயம் - 5:56 pm
பௌர்ணமி நேரம் - 9:11 pm
சந்திரன் பூமி அருகாமை தூரம் - 8:44 pm
ரியாத்...
சந்திரன் உதயம் - 6:08 pm
பௌர்ணமி நேரம் - 9:11 pm
சந்திரன் பூமி அருகாமை தூரம் - 8:44 pm
ஜித்தாஹ்...
சந்திரன் உதயம் - 6:36 pm
பௌர்ணமி நேரம் - 9:11 pm
சந்திரன் பூமி அருகாமை தூரம் - 8:44 pm
மக்காஹ்...
சந்திரன் உதயம் - 6:33 pm
பௌர்ணமி நேரம் - 9:11 pm
சந்திரன் பூமி அருகாமை தூரம் - 8:44 pm
மதினா...
சந்திரன் உதயம் - 6:37 pm
பௌர்ணமி நேரம் - 9:11 pm
சந்திரன் பூமி அருகாமை தூரம் - 8:44 pm
லண்டன்...
சந்திரன் உதயம் - 8:00 pm
பௌர்ணமி நேரம் - 7:11 pm
சந்திரன் பூமி அருகாமை தூரம் - 6:44 pm
பௌர்ணமி தினம் / நேரத்திற்கு அருகாமையில், சந்திரன் கீழ்வானத்தில் இருக்கும் போது பெரிதாக காட்சி தரும். அந்த காட்சியினை விஞ்ஞானிகள்
MOON ILLUSION என கூறுகிறார்கள். கீழ்வானத்தில் இருக்கும் போது - சந்திரனுக்கு அருகில் ஒப்பிட்டு பார்க்க, கண்களுக்கு (மரங்கள், கட்டிடங்கள்
போன்று) வேறு காட்சிகளும் உள்ளதால் - சந்திரன் பெரிதாக தெரிகிறது என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
கீழே உள்ள படத்தில், ஆரஞ்சு வண்ணத்தில் உள்ள வட்டங்கள் இரண்டும், ஒரே அளவில் உள்ளவை தான். அந்த வட்டங்கள் இடம்பெற்றுள்ள சூழலை
பொறுத்து ஒன்று பெரிதாகவும், ஒன்று சிறிதாகவும் தெரியும் (EBBINGHAUS ILLUSION).
சூப்பர் மூன் போன்ற நாட்களில் உள்ள காட்சிகள் இதில் இருந்து வேறுபடுகிறது. பொதுவாக சந்திரன் பூமிக்கு மிக அருகாமையில் இருக்கும் போது, சுமார் 10 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடன் காட்சித்தரும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ஜூன் 2013 இல் நிகழ்ந்த சூப்பர் மூன் போது வெளிவந்த பிரசுரம்
[செய்தி திருத்தப்பட்டு, கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 7:45pm/10.08.2014]
|