எங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு மூத்த தூண் சாய்ந்து விட்டது. posted byAbuthahir.mik (Holy mecca)[14 August 2014] IP: 69.*.*.* United States | Comment Reference Number: 36426
நமதூரின் வரலாறுகள்,வலிமார்களின் சரித்திரங்கள், நமதூர் பெரியவர்கள் பற்றிய குறிப்புகள். திருமண விழாக்களில் தேவைப்படும் அந்த குடும்ப பாரம்பரியம் பற்றிய தகவல்கள், ஏன்? மரண அறிவிப்பு சொல்லுவதற்கு கூட தேவைப்படும் குடும்ப உறவு முறைகளை கேட்டுத் தெரிந்துக் கொள்ள வருபவர்களுக்கு தேவைப்படும் குறிப்புகளின் அளவை விட அதிகமாகவே சொல்லி கொடுப்பதை நானும் பார்த்து இருக்கிறேன்.
மார்க்க சம்பந்தமாக பேசும் போது கடிகார முள் அவர்களை எச்சரிப்பதே இல்லை. ஆனாலும் அவர்களோடு பேசிக்கொண்டு இருக்கும் மற்றவர்கள் எப்போது முடியும் என்று கேலியாக கேட்டால் அதற்கு உதாரணமாக அவர்கள் சொல்லும் பதில்(சிலருக்கு மௌலிது ஓதும் நேரம், சிலருக்கு மௌலிதும்,ஹிகாயத்தும் ஓதும் நேரம், சிலருக்கு அதோடு பெரிய,சிறிய துஆ ஓதும் நேரம்) என்று நான் நேரம் குறித்து இருக்கிறேன் என்று சொல்லுவார்கள்.
வீட்டுக்கு வருபவர்களை நன்கு உபசரித்து அவர்களிடம் துஆ செய்யுங்கள் என்று பலமுறை சொல்லுவதோடு,நிறைவாக அவர்களுடன் ஸலாம் கொடுத்து, அவர்கள் விடை பெறும் போது கூட மீண்டும் ஒரு முறை துஆ செய்யுங்கள் என்று சொல்லி விடை பெறும் இவர்கள் இன்று நம்முடன் விடை பெற்று வல்லோனின் கட்டளைக்கு இணங்க இறையடி சென்று விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
கருணையுள்ள அல்லாஹ்,
எனது வப்பிச்சா மர்ஹூமா முத்து ஆஸியா உம்மா அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக... ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross