செய்தி: ஒரே மாதத்தில் 16 பேர் மரணம்! காயல்பட்டினம் பகுதியில் தொடரும் புற்றுநோய் பலிகள்!! கெமிக்கல் தொழிற்சாலையில் புதிய யூனிட் தொடங்க எதிர்ப்பு!!! - தினகரன் நாளிதழ் செய்தி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[16 August 2014] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36460
எங்களுடைய உணர்வுகளை உலகுக்கு எடுத்துக் கூறிய ஊடக சகோதரர்களுக்கு நன்றிகள் பல.
எங்கள் ஊரில் புற்று நோயால் பலியான எண்ணிக்கை அதிகம். பலர் தங்களுக்கு புற்றுநோய் இருப்பதையும், புற்றுநோயால் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தார் இதன் உண்மையை வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றனர்.
மற்ற ஊர் மக்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா ... கையில் காலில் ஏதும் கட்டி வந்தாலோ, வயிறு வலித்தாலோ, மூக்கில் இருந்து இரத்தம் வடிந்தாலோ.. மற்ற மக்கள் மருந்து மாத்திரை எடுத்து இலேசாக சென்று விடுவார்கள். எங்கள் ஊர் மக்களுக்கோ இது கான்சர் கட்டியாக இருக்குமோ, குடல் புற்றுநோயாக இருக்குமோ, இரத்த புற்றுநோயாக இருக்குமோ என்று அஞ்சி அஞ்சி செத்துக்கொண்டு இருக்கின்றார்கள். காரணம் தங்களின் வீடுகளிலும், பக்கத்து வீடுகளிலும் புற்று நோயாளிகளை கண்டு கண்டு வருவதால். இப்படி அனுதினமும் பயந்து பயந்து சாவாமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா.
எங்களுடைய அழுகுரல் ஆளும் வர்க்கத்திற்கு கேட்கவில்லையா.
எப்பா.. DCW .... பல பல கோடி சம்பாதிக்கின்றியே, அதில் சில வற்றை முறையான மாசு கட்டுப்பாட்டுக்கு செலவு செய்தால் என்ன.? இப்படி சுற்றுபுறத்தில் வாழும் மக்கள், கால்நடைகள், சுற்றுக் சூழல் ஆகியவற்றை சாகடித்தா சம்பாதிக்க வேண்டும்.
இருப்பதோ, எந்த உயிர் இனத்திற்கும் தீங்கு செய்யக்கூடாது, சிறு எறும்புக்கும் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்ற ஜெயின் இனத்தில்.ஆனால் செயல்பாடோ... என்னத்தை சொல்ல..?!!
இதற்காக பாடுபடும் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை (கெப்பா) உறவுகளுக்கு நன்றிகள் என்று மட்டும் கூறி பிரிக்க விரும்பவில்லை. வல்ல அல்லாஹ் அருள் செய்யட்டும்.
வல்ல இறைவா எங்களை தீங்குகளை விட்டும் காப்பாயாக. நிம்மதியான வாழ்வை வழங்குவாயாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross