செய்தி: டி.சி.டபிள்யூ. நிறுவனம் கடலில் எந்தவிதக் கழிவுகளையும் வெளியேற்றுவதில்லை: நிர்வாக துணைத் தலைவர் தி இந்து நாளிதழுக்கு கடிதம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நீங்கள் என்ன சாதாரண ஆளா posted bymackie noohuthambi (chennai)[21 August 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36541
சமஸ் அவர்கள் என்ன சாதாரண ஆளா, உங்களிடம் "something " வாங்கி இந்த கட்டுரை எழுதியதை மாற்றி சொல்வதற்கு. ஹிந்து பத்திரிக்கையின் உயர்வே அதன் நம்பகத்தன்மைதான். காய்தல் உவத்தல் இன்றி செய்திகளை தருவதுதான். ஏதாவது தவறு ஏற்பட்டால் அதை ஆதாரத்துடன் நிரூபித்தால் அதை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் அந்த நாளிதழ் குழுவுக்கு உண்டு. இந்த செய்தி திருவாளர் இரா.ஜெயக் குமார் அவர்களுக்கும் தெரியும்,
"செஞ்சோற்று கடன் தீர்க்க வஞ்சகர் வலையினில் வீழ்ந்தானடா வஞ்சகன் கண்ணனடா" என்று பாரதம் சொல்வது ஜெயகுமார் அவர்களுக்கு புரியாதா ...அந்த இருட்டும் பார்க்கின்ற விழியிருக்கும் எந்த சுவருக்கும் கேட்கின்ற செவியிருக்கும்...உண்மை ஒரு நாள் வெளிவரும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.
இன்று நேற்று தோன்றியதல்ல இந்து பத்திரிக்கை. என்ன துணிச்சல் இருந்தால் "இந்து" என்று பத்திரிக்கைக்கு பெயர் வைத்திருப்பார்கள். முஸ்லிம்கள் அப்போதே கொதித்து எழுந்திருப்பார்கள், கிறிஸ்தவர்கள் குதித்து ஓலமிட்டிருப்பார்கள். பார்ப்பனர்கள் பத்திரிக்கை என்று திராவிட கட்சிகள் ஒப்பாரி வைத்திருப்பார்கள்.ஆனால் நடந்தது என்ன, எல்லோரும் அதை படிப்பதை தங்கள் காலைக் கடன்களில் ஒன்றாக அன்றும் நினைத்தார்கள் இன்றும் நினைக்கிறார்கள். பணம் வாங்கி கொண்டு பிணம் தின்னும் மனித கழுகுகள் அல்ல இந்து பத்திரிக்கை.
கோடான கோடிகளை சம்பாத்தியம் செய்து கொண்டீர்கள்...கொள்ளை அடித்தீர்கள் என்று சொல்வது அநாகரிகம். ஆனால் இப்போது சாகுபுரத்தின் பின்புறம் ஒரு மயான புரம் உருவாகி இருக்கிறதே, அதற்கு யார் காரணம்.
கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தவர்கள் வேறு யாருமல்ல இதே மண்ணில் பிறந்த எட்டப்பன்தான் . உங்கள் வேஷம் கலைந்து போகும்.. நீல சாயம் வெளுத்து போகும். அப்போது இதே நிறுவனம் உங்களை காலால் எட்டி உதைத்து வெளியே தள்ளும்.
அப்போதும் உங்களை மன்னித்து உங்களுக்கு வாழ்வளிக்க ஓடோடி வரும் இந்த கருணை உள்ளம் கொண்ட காயல்பட்டினம்.
இப்போதே உங்களை திருத்திக் கொள்ளுங்கள். உண்மை நிலையை உணருங்கள். எங்கள் மக்கள் பிணங்களின் மீது தான் உங்கள் ஆலை அமைய வேண்டும் என்றால் குறித்துக் கொள்ளுங்கள் உங்கள் ஆலையின் அழிவின் ஆரம்பமும் அதன் கல்லறையும் இங்கேதான் கட்டப்படும்.அதன் அடியிலே எழுதப்படும்
"இங்கே சமாதி கொண்டுள்ளது காயல்பட்டின மக்களை சமாதியாக்கிய பெரும் நிறுவனம் DCW ".
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross