செய்தி: காயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ள கோவில் குறித்து பதட்டம்! ஆக்கிரமிப்பிலுள்ள கோயில், கோட்டைச் சுவரை அகற்ற இரு தரப்பினரும் ஒப்புதல்!! (இறுதிச் செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஒற்றுமையுடைய ஒருங்கிணைப்புக்கு கிடைத்த வெற்றி! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[23 August 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36570
அல் ஹம்திலில்லாஹ்! நமக்குள் அரசியல் முதல் ஆன்மீகம் வரை எத்தனை வகையான இரு கருத்துக்கள் இருந்தாலும்
அது எப்படிப்பட்ட தீவிரத்தன்மையுடன் சில நேரங்களில் கொழுந்துவிட்டு எரிந்தாலும் அத்தனையும் நமதூருக்குள்,
நம்மின மக்களுக்குள் நடக்கின்ற மனமாட்ச்சரிய சம்பவங்கள் தான். அந்த தற்காலிக கருத்து வேற்றுமை காலமெல்லாம் நீருபூத்த நெருப்பாய் நிலைத்து நிற்கும் என்று தப்புக்கணக்குப் போட்ட சதிகார எண்ணமுடையவர்களுக்கெல்லாம் சம்மட்டி அடியாக அனைத்து காயல் சகோதரர்களும் கைகோர்த்து களத்தில் நின்ற காட்சி!
இந்த ஒற்றுமைபோதும் நமதூரைக்காக்க, நம் மக்களுக்கு வரவிருக்கின்ற அபாயத்தை நீக்க,,எந்த நேரத்திலும்
நாங்களனைவர்களும் ஒருதாய்ப்பெற்ற பிள்ளைகளாய்
ஒன்றுசேர்ந்திடுவோம் என்பதை இவ் உலகிற்கு பறைசாற்றி விட்டோம் .இந்த ஒற்றுமை உணர்வை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உணர்த்திய வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்!
காயல்மா நகரத்தில் இப்படியொரு கட்டுப்பாடான ஒற்றுமையா?புற்றீசல்கள் போல் எங்கிருந்துதான் பறந்து வந்ததோ இந்த படை என்று பேசாமடந்தையாய் பிரமித்து நின்றார்களாம் வெளியூர் சகோதரர்களும், காவலுக்கு நின்ற காவலர்களும்,என்கின்ற செய்திகள் தேனாராய் எங்கள் இதயத்தில் பாய்ந்து இனித்தெடுத்து விட்டது..மாஷா அல்லாஹ்!.
இப்படை பலத்தால் இனி எந்த கவலையும் கொள்ளாதே இனிய காயல் சகோதரா. உனக்கொரு அநியாயம் என்றால் ஓராயிரம் கைகள் உதவிக்கு ஓடோடிவரும் இனி நம்மூரைக் காக்க நாம் எடுக்கும் எந்த ஒரு நடுநிலை செயலுக்கும் எப்போதும் வெற்றி,வெற்றி வெற்றிதான்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross