Re:...ALLATHEENA UNFIQOONA FIS SARRAAYI... posted bymackie noohuthambi (chennai)[25 August 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36638
மருமகன் சாலிஹ் அவர்கள் - அவர் மருமகன் என்பதற்காக அல்ல அவருடைய கருத்துக்கள் ஒரு சமாதான் தூது என்பதற்காக அவர் கருத்துக்களுடன் 100 விழுக்காடுகள் நான் உடன்படுகிறேன். எனது அன்றைய கருத்து பதிவிலும் வாவு சம்சுதீன் மாமா அவர்களுக்கு அனுப்பிய குருன்செய்தியிலும் இதை குறிப்பிட்டுள்ளேன்.
எவ்வளவு பெரிய நெருப்புக் குண்டத்தை சமாதான் தண்ணீர் ஊற்றி அணைத்திருக்கிறார்கள் .வெற்றி பெற்றிருக்கிறார்கள் நம் பெரியவர்கள். இதை ஊதி பெரிதாக்க நினைத்தவர்கள் தோல்வி கண்டிருக்கிறார்கள்.
இளைஞர்கள் ஆவேசப் படும்போதெல்லாம் இந்த மாதிரி பெரியவர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். 1993இல் நடந்த மீன் கடை போராட்டத்தில் சிறை சென்று மீண்டவர்களில் நானும் ஒருவன். அந்த வலியும் வேதனையும் இன்னும் என் உள்ளத்தில் நிலைத்து நிற்கிறது. மாறாத வடுவாக என் உடலில் தழும்புகளாக காணப்படுகிறது. வாவு மொகுதூம் ஹாஜி போன்ற பெரியவர்கள் அப்போது சமாதானக் குழுவை ஏற்படுத்தி எங்களை மீட்டெடுத்த செய்தி நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும்?
இறை அச்சம் கொண்டவர்களைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் இரத்தின சுருக்கமாக சொல்கிறான். ALLATHEENA YUNFIQOONA FIS SARRAAYI VAL LARRAAYI VAL KAALIMEENAL GHAILA VAL AAFEENA ANIN NAAS. வேதம் புதிதா? இல்லை. 1400 ஆண்டுகளுக்கு முன்னால் அல்லாஹ் இதை சொல்லி நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டி வெற்றி கனிகளைப் பறித்து நமக்கும் வழி காட்டி சென்ற அற்புத வாழ்க்கை திட்டம் அது. இதை நம் இளைஞர்கள் நன்கு கற்றறிந்திருக்கிரார்கள். நம் இளைஞர்களுக்கு சில நேரம் ஏற்படும் சபலங்கள் சலனங்கள் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி யோசிக்க அவர்களுக்கு சந்தர்ப்பம் அளிப்பதில்லை. அது ஷைத்தானின் ஊசலாட்டம். இளமையின் வேகம் அது.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நம் அடையாளம் - நமது இந்திய திருநாட்டின் அடையாளமும் பெருமையும் அதுதான். மதுவிலக்கு வேண்டும் எனக்கேட்டு நடைப் பயணம் வந்த வைகோ அவர்கள், "காயல்பட்டினம் போல் இந்த தமிழகமே மாறாதா" என்று ஏக்கப் பெருமூச்சு விட்டார், நா தழு தழுக்க தன் சந்தோஷத்தை வெளி இட்டார்.
குளிரூட்டப் பட்ட அறையில் இருந்து கொண்டு விலைமதிப்பு மிக்க மடிக் கணினியில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்வது மட்டுமல்ல, முகநூல் என்ற ஒரு முசீபத்தில் தங்கள் முகங்களை புதைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சம்பவ இடத்தில என்ன நடக்கிறது, உயிர்கள் உடைமைகள் எவ்வளவு விலை மதிப்பத்றது - அங்கே எவ்வளவு பதட்டம் நிலவுகிறது என்பதை உணர முடியாது.
உணர்வு என்பது வேறு உணர்ச்சி என்பது வேறு. போர்க் குணம் என்பது தீப் பந்தம் போல் எப்போதும் எரிந்து கொண்டே இருப்பது அல்ல. தீக்குச்சி போல் தேவைப்படும் நேரத்தில் அவ்வப்போது உரசி அணைக்கப் படவேண்டும் என்பதை நம் இளைஞர்களுக்கு இந்த கட்டுரை மூலம் சாலிஹ் அவர்கள் நன்கு எடுத்து காட்டி இருக்கிறார்கள்.
மத நல்லிணக்கம் விரும்பும் நம்மவர்களுக்கும் மாற்று மத சகோதரகளுக்கும் நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross