Re:... posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[25 August 2014] IP: 113.*.*.* China | Comment Reference Number: 36640
எதிரிகளை உருவாக்கலாமா என்று கேட்டால் 'உருவாக்கக்கூடாது ' என்பதுதான் பதில் .
எதிரிகள் உருவாகிவிட்டால் என்னசெய்வது , அதை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் இப்போது நம் முன் உள்ள பிரச்னை.
நம் ஊரில் திடீர் கோயில்கள் அவ்வப்போது உருவாவதும் , பிறகு சிலகாலத்திற்கு பிறகு மறைவதும் வாடிக்கையாவிட்டது.
இந்துக்கள் வழிபடுவதற்கு கோவில் வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அது இந்துக்களுடைய பகுதியில் அவர்களுக்கு உட்பட்ட சொந்த நிலத்திலேயே அமையப்பெறவேண்டும். மாறாக முஸ்லிம்களின் நிலத்தை ஆக்கிரமித்தோ அல்லது முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிள் அரசு ஆக்கிரமிப்பு நிலங்களிலோ மதநல்லினக்கத்திற்க்கு கேடு விளைவிக்கும் முறையில் அமையப்படக்கூடாது. அரசு இம்மாதிரியான சட்ட ஒழுங்கீனங்களை முளையிலேயே கில்லிஎறியவேண்டும்.
காயல்பட்டணத்தில் இன்னும் இரண்டு இடங்களில் இதுபோன்ற நில ஆக்கிரமிக்கப்பட்ட திடீர் வழிபாட்டுத்தலங்கள் உள்ளதாக அறியமுடிகிறது. அவற்றிற்கும் இதுபோன்ற சுமுக தீர்வு எட்டப்படவேண்டும்.
இது பொது வலைத்தளம் என்பதால் 'இந்த பிரச்சனை எங்கிருந்து துவங்கியது அல்லது யார் இதை செய்ய ஊக்கம் கொடுத்தது' போன்றவற்றை விரிவாக எழுதமுடியவில்லை. எனினும் சுருக்கமாக எழுதுகிறேன்.
காயல்பட்டனத்தை தனி தாலுகாவாக அறிவித்து நம் ஊரிலேயே தாலுகா அலுவலகம் அமைவதற்கு நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் ஊர் அனைத்து அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள் அதற்க்கான முயற்சிகளில் இன்றே துவங்கவேண்டும். இப்போதே ஈடுபடவேண்டும். சற்றும் தாமதிக்கக்கூடாது. இதுபோன்ற பிரச்சனைகளுக்க் இது ஒன்றே தீர்வு.
இப்மாதிரியான சலசலப்புகள் பெரும் கலவரமாகாமல் தடுத்த பெருமை ஒருசில காவல்துறை அதிகாரிகளையே சாரும். அன்று முன்னாள் DGPவால்டர் எஸ் தேவாரம் அவர்களும் . இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு துறை அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross