டேக் இட் ஈஸி...!!! எல்லாம் நம் நன்மைக்கே!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.)[31 March 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3667
நம் ஐக்கியப் பேரவையின் செயல்பாடுகள் யாவும் ஓர் தொலைநோக்குச் சிந்தனைக்குரியதாகவே இருக்கும்.
சும்மா!பொழுதுபோக்கிற்காக அவர்கள் அதை நடத்திக்கொண்டு வரவில்லை! பெரிய மனிதர்கள், சீரிய சிந்தனையாளர்கள், ஊர் ஒற்றுமை, மற்றும் பொது நலத்தில் அக்கரை கொண்டவர்கள், மனித நேயமிக்க தனவான்கள், இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து, ஆபத்துகளும், நெருக்கடிகளும், நமதூருக்கு வந்த பல காலகட்டங்களில் நிதனத்தோடும், நீதத்தோடும், செயல்பட்டு, தீக்கமான பல முடிவுகளை எடுத்து நமதூருக்கு தீங்கு வரவிடாமல், ஓர் அரனாகவே திகழ்ந்து நம்மைப் பாதுகாத்தவர்கள்!
நம் இணையதளத்தில் வெளிவந்த தேர்தல் புறக்கணிப்பு செய்திக்கு மறுப்பு வெளியிட்டிருப்பது, வரக்கூடிய ஆட்சி மாற்றத்தாலோ, அல்லது ஆளுங்கட்சியே ஆட்சிக்கு வந்தாலோ, நமக்கு ஏதேனும் நெருக்கடிகள் ஏற்பட்டுவிடக்கூடாதே? என்கின்ற அடிப்படையில் தான் இருந்திருக்கும்.
இதை ஓர் கவுரவப் பிரச்சனையாக தாங்கள் (காயல்பட்டணம்.காம்) எடுத்துக்கொள்ளாமல் நம் மூத்தவர்கள் நம் நன்மைக்காக கூறிய அறிவுரையாகவே கருதிக்கொள்ளும்படித் தாழ்மையோடு வேண்டிக்கொள்கின்றேன்.
காயல்பட்டணம்.காமின் சேவை தொய்வின்றித் தொடர்ந்து வர,என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross