கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள். என தருமை மருமகனாகிய (என்னை மாமா என்றுதான் அழைப்பார்)
S.K.சாலிஹின் சிந்தனையின் ஆக்கப்பூர்வமான அறிவூற்றின் அனுபவ அறிக்கையை பார்த்து அசந்து விட்டேன்.
அல்ஹம்திலில்லாஹ்! யாருடைய வித்து, கத்துக்கொடுக்கத்
தேவையில்லை.
அரிவாளை தூக்கி ஆவேசமாக வருபவனின் வெறியுணர்வைக்கூட அன்பு சாலிஹின் அமைதிக்குறிய செயலால் அப்படியே அசந்து விழுந்து விடுவான். அந்த அளவிற்கு மிக, மிக முதிர்ச்சியான முன் உதாரண சிந்தனைச் சுரங்கம்!
ஒரு மீன்கடை விவகாரத்தால் ஊரே பத்திஎரிந்து ஜென்ம பகையாய் மாறிவிட்ட சூழ்நிலைபோல் இரு சமூகத்தார்களும் எதிரியாகவே வாழ்நாள் முழுதும் வாழ்வோமோ என்ற அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி சகஜ நிலை வந்து கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் அவர்கள் வழிபாட்டுத்தள கோயிலை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை எளிதில் தீர்வாகக்கூடியதா?ஆனால் ஹம்திலில்லாஹ், எவரும் எதிர்பார்க்கா வண்ணம் எல்லாம் வல்ல அல்லாஹ் எதிரியின் இதயத்திலும் இலகுவான எண்ணத்தை உதயமாக்கி எல்லோரும் மகிழும்வண்ணம் உன்னத தீர்ப்பை தந்திட்டான்!
இணக்கமான ஒரு நிலைக்கு ஒத்துவந்த அப்பகுதி அத்தனை
அன்பு சகோதரர்களுக்கும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
அதே நேரத்தில் அவர்கள் கேட்கும் கேள்வியானது, எங்கள் கோயில் ஐந்தடி அகலமுள்ளது ஆக்கரமிப்பு நிலத்தில் இருக்கிறது ஒத்துக்கொள்கிறோம், ஆனால் ஐந்நூறு அடிக்குமேல் நீளமுள்ள ஆக்கிரமிப்பு கோட்டை சுவர் கட்டப்பட்டுள்ளதே அது உங்கள் ஊரிலுள்ள ஒரு நடுநிலை ஆளுக்கு கூடவா தெரியாமல் போய்விட்டது. நீங்கள் சரியான நேர்மையானவர்களாக இருந்தால் அந்த ஐநூறு அடி ஆக்கிரமிப்பு சுவரை இடித்துவிட்டு தனியாக நிற்கும் அந்த ஐந்தடி கோயிலை இடிக்க வேண்டும் என்று கேட்டிருந்தால் நீதவான்களாகிய உங்களின் நேர்மை பாராட்டுதலுக்குறியதாய் ஆகி இருக்குமே! அப்படி ஏன் நீங்கள் செய்ய முன்வரவில்லை? ஒருவேளை கோயில் மட்டுமே இடிபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பா? என்ற கேள்விகளுக்கு நம்மால் பதில் தரமுடியாமல் வெட்கித் தலைகுணிய வேண்டியது நமது நிலையாக மாறிவிட்டது !
எது எப்படியோ என்ன நடக்குமோ என்று பதறிதுடித்த நம் அனைவர்களின் நெஞ்சத்திலும் பாலைவாற்றியது மாதிரி நல்லதொரு முடிவைத்தந்தான் நமதிறைவன்!
ஆகவே அன்பு நெஞ்சங்களே இனிஇந்த சம்பவத்தை யொட்டியுள்ள எந்த பதட்டமான, பாதகமான செய்திகளை முற்றிலும் உண்மையறியாமல் ஊர் மக்களுக்கு முகநூல் முதற்கொண்டு மற்றைய அனைத்து ஊடகங்களிலும் பரப்பிட யாரும் உணர்ச்சிவசத்தால் தெரியாமல் துணை போக வேண்டாம் என்று அன்புடனும், ஒற்றுமையை விரும்பும் ஒரே நோக்கத்துடனும் விரும்பி கேட்டுக்கொள்கிறேன்! அல்லாஹ் அனைத்தும் அறிநிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross