சீவுதற்கு சிகையின்றி, சீப்புகள் எதற்காக? posted bykavimagan m.s.abdul kader (dubai)[31 March 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3676
காயல்பட்டணம்.காம் என்பது வெறும் செய்தி ஊடகம் மாத்திரம் அல்ல. நகர்நல சேவையில் தன்னை முழுவதும் அர்ப்பணித்துக்கொண்ட ஓர் அமைப்பு என்பதனை நாம் அனைவரும் அறிவோம்.
உள்ளூர் காயலர் முதல் உலகமெங்கும் பரவிக்கிடக்கின்ற ஒவ்வொரு மண்ணின் மைந்தரையும் இணைத்து,
சிதறிக்கிடக்கின்ற சக்திகளனைத்தையும் ஒருங்கிணைத்து, பல்வேறு நகர்நலப் பணிகள் தொய்வின்றி தொடர்ந்திட களப்பணியாற்றும் சமூக நிறுவனம்.
இன்று வெளிநாட்டு மன்றங்களை இணைக்கின்ற பணி முதல் இக்ராவின் செயல்பாடுகள் வரை, ஒவ்வொன்றிலும் காயல்.காமின் பங்களிப்பு மகத்தானது.
CFFC போன்ற தற்காலிக அமைப்புகளைத் துவக்கி, அதிவேகமாக பணியாற்றிட காயல்.காம் ஆணிவேராக விளங்கி வருவதையும் நாம் அறிவோம்.
மேற்படி ஊடகத்தை நடத்திவரும் நிர்வாகத்தினரும், அங்கத்தினரும் சமூகனலப்பனியில் யாருக்கும் சளைத்தவர்களல்ல என்பதனை அவர்களோடு இணைந்து களப்பணியாற்றிய எங்களைப் போன்றோர் நன்றாக அறிவோம்.
இப்படிப்பட்ட நேர்மையும், நெஞ்சுரமும் கொண்ட, காயல்.காமின் நேயர்கள் யாரும், வெறும் பொழுதுபோக்கிற்காக
அல்லாமல், மாறுபட்ட பல கருத்துக்கள் இருந்தபோதும் நகர்னலனுக்காகவே வாசித்தும், எழுதியும் வருகிறார்கள்.
இத்தகைய ஊடகத்தை,எவ்விதக் காரணமும் இன்றி காயப்படுத்த, நடக்காத ஒரு கூட்டத்தை நடந்தது போல் காண்பித்து, நண்பர் ஸாலிஹ் அவர்களையே துஆ ஓத வைத்து, அதன்
தொடர்ச்சியாக கண்டன தீர்மானம் என்ற பெயரில், போலி அரசியல்வாதிகளைப் போல ஓர் அறிக்கையை வெளியிட்டிருப்பது ஐக்கியப்பேரவைக்கு அழகல்ல!
ஐக்கியப்பேரவையின் பெரியவர்களே! எம்மைப் பெற்றவர்களே!! இதுபோன்ற பல அவசர, ஆத்திர முடிவுகளால், அடுத்த
தலைமுறை உங்கள் மீது வைத்திருக்கின்ற மதிப்பையும், நம்பிக்கையையும் இழந்து விட வேண்டாம் என்று பணிவோடு வேண்டுகிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross