செய்தி: சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை 2014: 10ஆம், 12ஆம் வகுப்புகளில், நகரளவில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு! விரிவான விபரங்கள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பண மழை பரிசு மழை பாராட்டு மழை posted bymackie noohuthambi (chennai)[27 August 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36786
மாஷா அல்லாஹ். பண மழையிலும் பரிசு மழையிலும் பாராட்டு மழையிலும் நனைகின்ற மானாவ மாணவிகளின் புன்னகை முகங்களை பார்க்கும் போதும் அதை வழங்கும் புரவலர்களை பார்க்கும் போதும் மனம் புளகாங்கிதம் அடைகிறது. இந்த காலத்தில் நாம் ஒரு மாணவனாக இருந்திருக்க வேண்டாமா என்று மனம் ஆசைப் படுகிறது.
வெறும் 12 ரூபாய் வருஷத்துக்கு ஸ்கூல் பீஸ் கட்ட வசதியில்லை. ஆலிம்ஸா மகன் என்று பள்ளிக் கூடத்தில் கடிதம் எழுதிக் கொடுத்து அந்த பீஸை ரத்து செய்ய பட்ட பாடு...படிக்க வைக்க வழியில்லை, இவனை நீ படிக்க வைத்து உன் மகளுக்கு மாப்பிள்ளையாக எடுத்துக் கொள் என்று ஒரு பணக்காரா உறவினரிடம் கேட்டபோது, இப்போது வசதி இல்லை என்று அவர் கை விரித்து விட்ட போது அந்த மாணவனின் தந்தையின் இதயம் பட்ட பாடு...
உங்கள் மகனுடன் என் மகனையும் சேர்த்து படிக்க வையுங்கள் அதற்கான பணத்தை நான் தந்து விடுகிறேன் என்று இன்னொரு பணக்கார உறவினரிடம் சொன்னபோது , அது சரிப்பட்டு வராது என்று அவர் ஏளனம் செய்து அந்த கோரிக்கையை உதறி விட்டபோது அந்த பெற்றோர் உள்ளம் பட்ட பாடு .
அதற்கு பிறகு நமதூரில் பெரளி பன்னுகிறவனைத்தான் அந்த காலத்தில் வேறு வழி இல்லாமால் மதரஸாவுக்கு அனுப்புவார்கள். அந்த வழக்கப்படி, அவனை ஊருக்கு அனுப்ப அவனது தந்தை முடிவு எடுத்தபோது ஒரு அறிமுகமான நண்பர் உங்கள் மகனை நான் படிக்க வைக்கிறேன், எங்கள் கடையிலேயே அவன் இருந்து படிக்கட்டும் என்று எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நட்புக் கரம் நீட்டி அந்த மாணவனை அரவணைத்து படிக்க வைத்தார்.அல்ஹம்து லில்லாஹ்.
அந்த தந்தை யாரும் அல்ல, மர்ஹூம் முஹம்மது மக்கி ஆலிம் அவர்கள்தான். அந்த மாணவன் யாரும் இல்லை. இந்த கருத்தை கண்ணீருடன் இங்கு பதிவு செய்யும் அடியேன்தான். மாறாக, நான் ஓதி இருந்தால் ...மார்க்க அறிஞனாக பரிணாமம் பெற்றிருந்தால்...எனது நண்பர் ஒருவர் வேடிக்கையாக சொல்வார்...தப்பி விட்டீர்கள். இந்த பித்னா உடைய காலத்தில் நீங்கள் என்னவாகி இருப்பீர்களோ....அல்லாஹ் காப்பாற்றினான். எல்லாம் நன்மைக்கே.
அதனால்தான் என் தகுதிக்கு ஏற்றபடி வருடம் தோறும் இப்படி பட்ட மாணவ மாணவிகளுக்கு "மக்கி ஆலிம் நினைவு பரிசு" வழங்கி கௌரவித்து வருகிறேன். இன்னும் செய்ய ஆசைகள் இருந்தாலும் பொருளாதார பின்னடைவுகள் அதற்கு தடையாக இருக்கிறது.
நாம் பாடுபட்டு சேர்த்த பணத்தை கொடுக்கும் போது இன்பம் வாடும் ஏழை மலர்ந்த முகத்தை காணும்போதும் இன்பம்..
பரிசுகளை அள்ளிச் செல்லும் மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளை கொட்டிக் குவிக்கும் நல்ல உள்ளம் படைத்த வள்ளல்களுக்கும் வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross