செய்தி: கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ தேவைகளுக்கு சென்னை வரும் காயலர்களுக்கு KCGC-ன் குறுகிய காலம் தங்கும் விடுதி! சென்னை மண்ணடியில் உதயம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சென்னை 375 posted bymackie noohuthambi (chennai)[29 August 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36826
1639 ஆகஸ்ட் 22ம் திகதி சென்னை நகரம் என்ற மத்ரஸா பட்டினம் உதயமானது. இன்று அதற்கு வயது 375.
இந்த நேரத்தில் இப்போது மத்ரஸா பட்டினமாக இருக்கும் காயல்பட்டினத்து மக்களுக்காக இப்படி ஒரு "காயலர் இல்லம்" சென்னையில் உதயமாகி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த 375 ஆண்டுகளில் நமது காயல்பட்டினத்து மக்கள் இங்கு வந்து குடியேறி தொழில் செய்து பள்ளிவாசல்கள் அமைத்து, மதரசாக்கள் அமைத்து பல்வேறு நல்ல காரியங்கள் செய்துள்ளார்கள். ஊரில் இருந்து வருபவர்களுக்கு அவர்கள் இடத்திலேயே தங்க, உண்க, தொழில் செய்ய ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். ஊரில் நடக்கும் நல்ல காரியங்களுக்கு பொருளாதார உதவிகளும் செய்து வந்திருக்கிறார்கள்.
காலபோக்கில் சென்னை நகரம் நெருக்கடி மிகுந்த நகரமாக மாறியபோது உள்ளங்களும் நெருக்கடிக்குள் ஆயின. பக்கதிலிருப்பவர்களை கூட கவனிக்க முடியாமல் அடுக்கு மாடி வீடுகளும் சென்னையை விட்டு வெகு தூரத்தில் குடி இருக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது . தொழில், வேலைகள் என்று பலரும் இயந்திர மயமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .
இப்படியே போனால் நம் மக்களுக்கு நம் முன்னோர்கள் செய்த உதவிகளுக்கு முற்றுப் புள்ளி விழுந்து விடுமோ என்று சிந்தித்த இளைஞர்கள் மீண்டும் நமதூர் மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய கட்டாயத்தை சிந்தித்து அதற்கு வித்திட்டதுதான் இந்த KCGC யின் காயலர் இல்லம் உதயமாவதற்கு வழி செய்துள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.
நமதூர் மக்கள் இந்த நல்ல நோக்கத்தை புரிந்து கொண்டு, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதன் சட்டதிட்டங்கள் மிக கவனமாக, பல உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு, நீண்ட கலந்துரையாடல் - விவாதங்கள் செய்து வரையப்பட்டவை .
முன் காலங்களில் முத்துச்சாவடி என்று அமைத்து நாடெங்கும் நம் மக்களுக்கு உதவிகள் செய்தார்கள் மறைந்து விட்ட அந்த நல்லோர்களுக்கு இந்த நேரத்தில் நாம் து ஆ செய்வோம் .அவர்கள் மண்ணறைகளை அல்லாஹ் விசாலமாக்கி வைத்து அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்து அருள் புரிவானாக.
அந்த வழியில் தங்கள் பயணங்களை ஆரம்பித்துள்ள KAYALPATNAM CHENNAI GUIDANCE COMMITTEE உறுப்பினர்களின் இந்த முயற்சி நல்ல பலனளிக்க அல்லாஹ் அருள்புரிவானாக. அவர்கள் தொழிலில் அபிவிருத்தியையும் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுத்து எல்லா வளமும் பெற்று வாழ அருள்புரிவானாக. தொடர்ந்து இந்த நல்ல காரியங்களை செய்யும் உள்ளம் கொண்டவர்கள் இதில் உறுப்பினர்களாக சேர்ந்து தங்கள் பங்களிப்பை வழங்கும் படி வேண்டிக் கொள்கிறேன்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது. அது எப்போதும் யாருக்கு என்ன உதவி செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டே இருக்கும். வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross