அதிர்ச்சியாக உள்ளது!!! posted byS.K.Salih (Kayalpatnam)[30 August 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 36897
காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழா தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, என் சகோதரன் அல்ஹாஜ் பி.எஸ்.ஷாஹுல் ஹமீதுடன் வீடு திரும்பிக்கொண்டிருக்கையில், ‘அச்சாச்சி’யை அவர்களது வீட்டு வாசலில் கண்டு சுகம் விசாரித்தோம். ராஹத்தாக அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதுவே அவர்களின் கடைசி இரவு என்பதை நினைத்துப் பார்க்கையில் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. மரணம் யாரையும், எப்போதும், எந்த இடத்திலும் சந்திக்கும் என்பதற்கான சான்று இது!
இன்று நள்ளிரவில் அச்சாச்சி அவர்கள் வஃபாத்தான செய்தி 03.10 மணிக்கு எனக்கு சொல்லப்பட்டபோது, “இன்றிரவுதானே பேசிவிட்டு வந்தேன்...? 4 மணி நேரம் கூட கடக்கவில்லையே...??” என்று எண்ணியபோது என்னால் அச்செய்தியை நம்பவே முடியவில்லை.
சுறுசுறுப்பான பெண்மணி. இத்தனை வயதிலும் மூக்குக் கண்ணாடி அணியும் தேவை அவர்களுக்கு ஏற்படவில்லை. சின்ன வேலையேயானாலும் குமரிப் பெண்கள் கூட சலித்துக்கொள்ளும் இக்காலத்தில், நாமே மலைத்துவிடும் பல பணிகளை வெகு எளிதாக செய்து முடித்தவர்கள்...
எங்கள் கிழக்குப்பகுதி வட்டாரத்து பெண்மணிகளை, முறையான ஆண்கள் துணையுடன் ஒருங்கிணைத்து, வட இந்தியாவில் பல சுற்றுலாக்களை, ஜியாரத் பயணங்களை குறைகளின்றி ஏற்பாடு செய்து, அனைவரையும் மகிழ்வித்த பெண்மணி...
நிறைந்த மனதுக்கு சொந்தக்காரி இவர்கள்...
பக்க சார்பின்றி, சர்ச்சைகளின்போது நியாயத்தை உணர்ந்து நடந்தவர்கள்... தன் தலையீடு தேவைப்பட்டால் நியாயமான அடிப்படையில் தலையிடுவார்கள். அல்லது அமைதியாக இருந்துவிடுவார்கள்.
இன்று அம்மணி அவர்கள் நம்மை விட்டும் பிரிந்து சென்றுவி்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் அன்பு மகனார் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் காக்கா, பேரனான - தம்பி ஜிஃப்ரீ, டூட்டி குடும்பத்து உறவினர்கள் உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.
அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross