Re:...கேட்பாரற்ற KEPA ? posted bymackie noohuthambi (chennai)[30 August 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36905
KEPA ஏதோ கேட்பாரற்ற இயக்கம், இதை யார் சட்டைபண்ணுவார்கள் என்று நினைத்தவர்கள் அலட்சியம் செய்தவர்கள் எண்ணத்தில் இடி விழுந்து இருக்கிறது. DCW ஆலை நிர்வாகத்தில் உள்ளவர் இங்கு பகுதி நேர வேலை பார்க்கிறாரா (PART TIME WORK ) என்ற சந்தேகம் அந்த நிர்வாகத்துக்கு அல்ல, பொது மக்களாகிய நமக்கே ஏற்படும் அளவுக்கு புள்ளி விவரங்கள் தந்திருக்கிறார்கள்.
சிங்கத்தின் குகையிலே சென்று அதன் நாடி நரம்புகளை தடவிப் பார்க்கும் தைரியம் இவர்களுக்கு எப்படி வந்தது. எல்லாம் நமது மக்கள் கொடுக்கும் பேராதரவுதான். நாளிதழ்கள், தொலைக் காட்சிகள் போன்ற ஊடகங்களும் இந்த உண்மை நிலையை உணர்ந்து KEPA வின் போராட்டங்கங்களுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் இந்த ஊடகங்கள் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. 60 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த ஒரு நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் ஆட்சியை அகற்ற துணை புரிந்தது. அது செய்த தப்பு என்ன ? நாட்டில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும் வளர்ச்சிகள் ஏற்பட்டாலும் மக்களை சுரண்டுவதும் ஊழல் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதும் அவர்கள் ஆட்சியை மக்கள் தூக்கி எறிய களம் அமைத்துக் கொடுத்தது இந்த ஊடகங்கள் தான்.அதற்காக இந்த ஆட்சி நீடித்து நிலைத்து இருக்கும் என்ற உத்தரவாதமும் இல்லை. மக்கள் மனமாற்றங்கள் அதற்கு துணை நிற்கும் ஊடகங்கள் மீண்டும் வேறு ஆட்சியை அரியணையில் ஏற்றி அழகு பார்க்க வைப்பார்கள். எனவே மக்கள் விரோத சக்திகள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
எவ்வளவு செல்வ வளம் - அரசியல் செல்வாக்கு - சொல்வாக்கு இருந்தாலும் அதை ஊதி தள்ளி அப்புறப் படுத்தும் சக்தி இந்த ஊடகங்களுக்கு உண்டு என்பதை DCW நிர்வாகம் உணர தலைப் பட்டிருக்கிறது. அரசின் கவனத்தை இந்த KEPA அமைப்பு ஈர்த்திருக்கிறது என்ற உண்மையை எல்லோரும் அறிந்து அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது நம் கடமை. பாராட்டும் அங்கீகாரமும்தான் அவர்களுக்கு தேவை. களத்தில் சீறிப் பாயும் காளைகளாக அவர்கள் இருப்பார்கள்.இது என் கணிப்பு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross