வேட்ப்பாளரை ஜமாத் கண்காணிக்கவேண்டும் என்பதில் எவருக்கும் இரு கருத்துக்கள் இருக்க முடியாது.சென்ற வேட்பாளர்கூட தன்னிச்சியாக நடந்திருக்கலாம்.ஆனால் இவைகளையெல்லாம் அறிந்து நன்றாக அலசி ஆராய்ந்து ஒட்டுமொத்தமாக ஒருமித்த ஒற்றுமையோடு ஒரு வேட்பாளரை தேர்வு செய்து அறிவித்து இருக்கிறார்கள் என்ற நல்ல சாதகாமான என்ணத்தை ஏன் நாம் நினைக்க கூடாது!
தேர்வான எல்லோர்களும் திசைமாறிப்போவார்கள் ஆகவே அவரவர்கள் விருப்பபடி வழி செல்லவிட்டுவிடுங்கள் என்ற சித்தாந்தத்திற்கு நாம் வலுகொடுக்க முன் வந்தால் பாரம்பரிய புகழ்மிகு நமதூரில் அரசியல் சாக்கடைதான் அங்கும் இங்குமில்லாமல் எங்கும் ஓடி வழியும்!
1 வது வார்டு உறுப்பினர் மட்டும் ஒரு அரசியல் கட்சியில் சேரவில்லை,தலைவர் முதல் அநேக உறுப்பினர்களும் அவரவர் இஸ்டத்திற்கு அங்கம் வகித்தார்கள் அணிமாறினார்கள்!
என்னைப்பொருத்தவரை எள்ளளவும் நினைக்கவில்லை தலைவியவர்கள் ஒரு அரசியல் கட்சியில் இணைவார் என்று. ஆக அது அவர் விருப்பம்.
ஆகவே தேர்ந்த உறுப்பினர் இப்படி நடப்பாரோ என்ற
ஜோதிடத்தினுள் நுழையாமல் நல்லதையே நினைத்து ஒரு ஜாமத்தின் ஒற்றுமைக்கு நாம் உற்சாகம் கொடுப்பதை விட்டுவிட்டு கற்பனை கதைபேசி நம் ஒருமித்த உணர்வை பலகீனப்படுத்த வேண்டாம் தயவு செய்து.
எல்லா ஜமாத்திலும் குருவித்துறைப்பள்ளி ஜமாஅத்தின் தர்மசங்கட நிகழ்வுபோல் நிகழும் என்ற எதிர்ப்பார்ப்பும் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்!
முடிவாக நான் முறையிட முனைவது ஒரு ஜமாத் ஒற்றுமையாக ஒருமித்த எண்ணத்தோடு ஒரு வேட்ப்பாளரை நிறுத்தி இருக்கிறது!அவர்களின் ஒற்றுமையை நாம் மெச்சவேண்டும், அவர்களின் ஒருமித்த உணர்வை நாம் பாரட்டிப்புகழ்ந்து அதைபோல் அனைத்து ஜமாத்தும் நமதூறும் ஒற்றுமையின் ஒய்யார கோபுர கலசமாய் மின்ன வேண்டும் அதற்க்கு நாம் அனைவர்களும் ஒத்துழைக்க வேண்டுவது மட்டுமல்ல எல்லாம் வல்ல அல்லாஹ்வும் நம் துவாவை கபூல் செய்ய வேண்டும் ஆமீன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross