பகுதி மட்டும் வேறு - நாடகம் பழையது..! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[05 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37008
கொம்புத்துறை - சிங்கதுரை மீனவர்களின் வாழ்வாதாரத்தை தனது இரசாயன கழிவால் நாசம் செய்து தனது DCW பொருளாதாரத்தை பல கோடி வருவாயை உயர்த்தி விட்டு அந்த பல கோடி பொருளாதரத்தில் சில சொற்பமான சில ஆயிரம் ரூபாயில் இந்த மாதிரி நலத்திட்டம் என்ற பெயரில் அந்த பகுதியில் உள்ள சில மக்களை ஈர்த்து தனது ஆலையின் அமில கழிவின் மூலம் பாதிக்கபடும் (நிலத்தடி நீர் - இயற்க்கை வளம் - கடல் வளம் பாதிப்புக்கு) அநியாயத்திற்கு தனக்கு - DCW க்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்ற உள்நோக்குடன் அரங்கேற்றப்படும் அவலம் இது..!
ஆலையின் இராசயன கழிவால் இயற்கை வளங்களை அழித்து விட்டு - பிறகு நாங்கள் DCW மரம் நடுகிறோம், (DCW வின் கைக்கூலிகளுக்கு - புகைப்படங்களுக்கு - பத்திரிக்கை செய்திகளுக்கு மட்டும்) மரக்கன்று வழங்குகிறோம் என்ற வேஷம் எல்லாம் களைய பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன..! அந்த வேஷம் - நாடகம் அது இன்னும் DCW தொடர்வது வியபொன்றும் அல்ல...
நிலத்தடி நீரை சுற்று வட்டார பகுதியில் உனது DCW கட்டுப்பாட்டில் பல எண்ணிக்கையில் ஆழ்துளை போர்வல் மூலம் தினசரி பல லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை அரசு விதிகளுக்கு மாறாக DCW இராசயன ஆலை கொள்ளையடிப்பதும் - அது தொடர்வதும் வியபொன்றும் அல்ல.. அதன் பாதிப்பு / நிலத்தடி நீர் தட்டுப்பாடு விரைவில் உனது ஆலையின் முன்பு மக்கள் போராட்டத்தின் மூலம் வெளிப்படும்..
ஆளும் அரசும் இது முன் ஆண்ட அரசும் உனது அநியாயத்திற்கு இப்போதைக்கு உனக்கு துணை புரியலாம்..! உனது செயலையும் / எனது செயலையும் கவனிக்கும் ஒரே கடவுள் (இறைவன்) அவன் உனது அநியாயத்திற்கு விரைவில் முற்றுபுள்ளி வைப்பான்... பொறுத்திருந்து அதை பாதிக்கப்பட்ட மக்கள் காண்பார்கள்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross