/* தான் ஆதரிக்கும் ஒரு நபர் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைபடுவதில், எங்கிருந்து குறுகிய எண்ணம் வருகிறது? */ Copy & Paste
கண்டிப்பாக ஒருவரை ஆதரிப்பதும், ஒருவரை எதிர்ப்பதும் ஒவ்வொருவரின் உரிமை. அது போல் - தேர்தலில் போட்டிப்போடுவதும் - அனைத்து மக்களின் ஜனநாயக உரிமை. அதற்கு வர்ணம் பூசுவது - முறையற்ற செயல்.
குறுகிய எண்ணம் என்றால் ?!
/* பூர்வீககுடி மக்களுக்கும், பிழைக்க நமதூருக்கு வந்து ...*/ Copy & Paste
பூர்விகம் என்றால் எத்தனை வருடம் என்ற ஏதாவது அளவுகோல் வைத்துள்ளீர்களா? இவங்க இங்கு வந்து 50 வருஷம் இருக்கலாம், காயல்பட்டினம் மக்கள் இங்கு வந்து 800 வருசமா, 1000 வருசமா? இங்குள்ள எல்லா மக்களின் பூர்வீகம் 800 வருசமா, 1000 வருசமா? அதுக்கு முன்னாடி இங்கு மனித வாடையே இல்லையா?
அதென்ன பிழைக்கக் நமதூருக்கு வந்து ...? நம்ம என்ன, அரபு நாடுகளில் இருந்து இங்கு சுத்தி பார்க்க வந்தோமோ?
அவங்களாவது தமிழகத்தில் ஒரு பகுதியில் இருந்து இங்கு வந்தாங்க, நாம - வேறு ஒரு நாட்டில் இருந்து இங்கு வந்தோமேன்னு பெருமையா சொல்லி கொள்கிறோமே? அவங்களுக்கு ஒரு நியாயம், நமக்கு ஒரு நியாயமா? இது குறுகிய எண்ணம் இல்லையா, பரந்த மனப்பான்மையா?
/* நமதூரின் ஒரு பகுதியின் பெயரை, தங்கள் இஷ்டத்துக்கு மாற்ற முயற்சித்தவர்களுக்கும் ... */ Copy & Paste
கொம்புத்துறை பழைய பெயரா, கடையக்குடி பழைய பெயரா என்பது வரலாற்று ஆசிரியர்கள், ஆய்வு செய்து முடிவு செய்யட்டும். ஆனால், அதை கொலை குற்றம் போல் சொல்லிவிட்டு, ஒரு குடும்பத்தினர் - மூணு வீடு கட்டிட்டு, அந்த குடும்ப பெயரில் நகர் என அந்த பகுதிக்கு பெயர் சூட்டிக்கொள்வதை சரி காண்பது, குறுகிய எண்ணம் இல்லையா, பரந்த மனப்பான்மையா?
ஒரு தொழில் அதிபர் ஒரு பள்ளிக்கூடத்தை ஓர் இடத்தில கட்டியப்பிறகு, அந்த பகுதிக்கு பல்லாண்டுகாலமாக இருந்த பெயரை நீக்கி, அந்த தொழில் அதிபர் பெயரில் 1வது தெரு, 2வது தெரு என பெயர் சூட்டிக்கொள்வதை, பிறர் செய்தால் அதனை குறை சொல்லிவிட்டு, சரி காண்பது, குறுகிய எண்ணம் இல்லையா, பரந்த மனப்பான்மையா?
பிற பெயர் மாற்றங்களை குறைசொல்லிவிட்டு, எகிப்து தலைநகர் கைரோ மூலம் காஹிர்பதன் என்ற ஊர் பெயர் வந்து, அது தான் மருவி காயல்பட்டினம் ஆனது என்று பெருமை கொள்வது, குறுகிய எண்ணம் இல்லையா, பரந்த மனப்பான்மையா?
இதை நான் சொல்வதால் - ஏதோ, நான் ஒரு சாராரை ஆதரிப்பதாக எண்ண வேண்டாம். சில விமர்சனங்களில் உள்ள அபத்தங்களை பார்த்தப்பிறகு தான் - நியாயம் என பட்டதை எழுதியுள்ளேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross