தேர்தல் களத்தில் இருவர்கள்தான் நிற்கிறார்கள் ,ஒருவரை எதிர்த்து ஒருவர் நிற்கிறார் இது ஜனநாயக மரபும் உரிமையும் ஆகும்.இது எப்படி ஒற்றுமையை குழைக்கும் செயல் என்று எனதருமை நண்பர் கேட்க்கிறார்!
நான் எழுதியது,ஒரு ஜமாத் ஒட்டுமொத்தமாக ஒற்றுமையாக ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.அவரை எதிர்த்து அந்த ஜாமத்தை சார்ந்த எவரும் நிற்கவில்லை. ஆகவே அந்த ஜாமத்தின் ஒற்றுமை வெற்றிபெற வேண்டும்,அந்த ஜாமத்தின் ஒருங்கிணைப்புக்கு எந்த குந்தகமும் எந்த குழப்பமும் ஏற்படாவண்ணம் அவ் வேட்பாளர் வெற்றிபெற வேண்டும் என்றுதான் எழுதினேனே தவிர,எதிர்த்து நிற்கும் வேட்பாளர் வீழவேண்டும்,ஒழியவேண்டும் என்ற நேரிடியான அநாகரீக அசிங்கமான அரசிசியல் வசனங்களை வீசுகின்ற தரம் தாழ்ந்த கருத்துக்ககளை நான் பதிவு செய்ய வில்லை!
ஒருங்கிணைந்த ஒற்றுமையான ஒரு ஜமாத் வெற்றி பெற்றால் அது நம் புனித மார்க்கத்தை பின்பற்றிவாழும் நமதூரின் பாரம்பரிய வாழ்க்கைக்குறிய மக்களுக்கு ஒரு வழிகாட்டுதல் மட்டுமல்ல,அதுபோல் அனைத்து ஜமாத்தினர்களின் ஒற்றுமையையும் ஒருசேர வித்தூண்டும் உன்னத வழியாகும் என்ற அந்த ஒரு கண்ணோட்டத்தில் தான் என் கருத்தை பதிவு செய்தேன்!
என் கண் முன் நிற்பது நமதூரின் ஒரு அங்கமான ஒரு ஜமாத்தின் ஒருங்கிணைந்த ஒற்றுமை ஒன்று மட்டும் தான் அதற்க்கு அடுத்ததுதான் ஏனைய மற்றைய அமைப்பும், அரசியலும், உவமைக்கு ஒன்றை குறிப்பிட்டால்,நான் சார்ந்திருக்கும் தி.மு.க விலிருந்து ஒருவரை இந்த ஒற்றுமை ஜமாத் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட வைத்தால்,
இறைவன் அறிய கூறுகிறேன் என்னுடைய முழு ஆதரவு அந்த ஒட்டுமொத்த ஒற்றுமை ஜமாத்தின் பக்கமே!.
எம்மின மக்களின் ஒற்றுமைக்கு பாடுபடுவதற்க்காகத்தான் நான் வேறு அமைப்பிலும் அரசியலிலும் அங்கம் வகித்து வருகிறேன். எனக்கு வேண்டிய நண்பருக்கோ,ஒரு தனவந்தருக்கோ,ஒரு தலைவருக்கோ,தலைவிக்கோ நேரிடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு தரும் விதமாக நமதூரின் எந்த ஒரு ஜாமத்தின் ஒற்றுமைக்கு எதராக செயல் படுகின்ற ஈனத்தனமான செயலில் எள்ளளவு கூடஎன் நேர்மை நிலைப்பாடு நுழையாது. அப்படி இரகசியமாக நான் ஆதரவு கொடுப்பேனேயானால். ஊர் ஒற்றுமை,ஊர் ஒருங்கிணைந்து இருக்கவேண்டும் என்ற என்னுடைய வார்த்தைகள் எல்லாம் வஞ்சகத்தன்மை உடையதாகும்!(அல்லாஹ்காப்பாற்றுவானாக!) .
நண்பர் குறிப்பிட்டதுபோல் களத்தில் இருக்கும் இருவரில் ஒருவர் கோமான்தெரு ஜமாத்தை சார்ந்தவர் எதிர்த்து நிற்பவர் BJP யை சேர்ந்த ஒருவரை இந்து முன்னணி நிறுத்துவதாக (ஒரு வாதத்திற்காக) வைத்து கொள்வோம், தற்போது நண்பரின் நிலைப்பாடு என்ன? ஜமாத்தாவது ஊராவது ஒற்றுமையாவது, உன்னத அரசியல் பாரம்பரிய முறைப்படி நாட்டில் எப்படி தேர்தல் எதார்த்தம் நடக்கிறதோ அதற்க்கு தலைவணங்க வேண்டும் என்ற கருத்தை கவ்விப்பிடித்து கொண்டிருப்பாரா?
அருமை அன்பு நண்பரே மனதை சற்று தளர்த்தி விசாலமாகவும் வெளிப்படையாகவும் ஊர் நலன் நாடியும்,ஊரின் ஒருமித்த ஒற்றுமைக்காகவும் உங்கள் எண்ணத்தை ஓட விடுங்கள். மேலோட்டமாகவும் மேதாவித்தனத்தின் சாமர்த்திய சாதுரிய எழுத்தாற்றலாலும்,பேச்சாற்றலாலும் கிடைக்கும் தற்காலிக வெற்றி விட்டில் பூச்சி வாழ்வுக்கொப்பானது!
ஒரு தெருவை தலைமை ஏற்று நடாத்தி செல்பவரும்,ஒரு ஜமாத்தை பொறுப்பேற்று நடத்துபவரும் ஒரு ஊரை,ஒரு மாவட்டத்தை தலைமை ஏற்று நடத்தும் தலைமையானது காய்தல்,உவத்தலின்றி,விருப்பு வெறுப்புகளுக்கப்பாற்ப்பட்டு நடுநிலமையாக, தான்அங்கம் வகிக்கும் ஏனைய இயக்ககத்தின் பக்கம் சாயாமல் தன் தலைமையை நம்பி இருக்கும் மக்களுடைய ஒற்றுமைக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்! தன்னுடைய நிலைப்பாட்டை எந்த ஒரு பிரிவுக்கும் பகிரங்கமாகவோ,பதுங்கியோ ஆதரவு கொடுக்க முன் வந்தால்,அத தலைமையின் சுயநலத்தன்மையின்
சுயரூபம வெளி வரத் துவங்கி விடும்!
அதற்கு ஆயிரம் காரணங்கள் கூறினாலும்,
எச்சூழ்நிலையிலும் தன் கீழுள்ள மக்களின் நம்பிக்கைக்குறிய நடுநிலையில் ஒற்றுமையைப் பாதுகாக்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எந்த பிரிவினருக்கும் எதிராகவோ ஆதரவாகவோ தன்னுடைய தலைமையை வளைத்துக் கொடுக்காமல் பெருந்தன்மையால் அனைத்தையும் அவதானிக்கும் தலைமை தான் நம்முடைய தலைமை என்ற எண்ணம் என்போன்றோர் முதல் ஏனைய நடுநிலை வாதிகளின் எதிர்பார்ப்பாகும்.ஆனால் அந்த நியாயமான எதிர்பார்ப்பு இன்று எம்மைப்பார்த்து எக்காளமிட்டு சிரிக்கிறது.அந்த சிரிப்பொலி நம்மூரவர்களின் காதிலும் விழும் என்றும் நம்புகிறேன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross