ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோர் பதம், posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[07 September 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37082
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோர் பதம்,வேலையில் இருந்த ஒரு தொழிலாளி இறந்திருக்கிறார்.அந்த ஆலை நிர்வாகம் மனிதாபத்தின் அடிப்படையில் அவர்கள் குடும்பத்தை அழைத்து தற்போது முடிவாகியிருக்கும்உதவித்தொகையையும் ஒருவருக்கு வேலைஉதவியையும், அறிவித்திருந்தால் அந்த குடும்பத்தினர் எவ்வளவு மனநிம்மதி அடைந்த்ருப்பார்கள்.
எவன் செத்தால் நமக்கென்ன என்று பாராமுகமாக செயல்படும் நிர்வாகத்தின் கல் நெஞ்சத்தை நெருக்கடி என்ற சம்மட்டியால் சமிட்டினால்தான் அக் கல் உடையும் என்பதற்கோர் உதாரணம் தான் இந்த மறியல் போரட்ட சம்பவம் சம்பவம்!
இது அந்த நிர்வாகத்தின் உள் விவகாரமாக இருந்தாலும்
அந்த ஆலையின் கழிவுகளால் பரவும் உயிர்கொல்லி நோய் கிருமியின் தாக்கத்தால் எவுளவு உயிர்களை நாம் இழந்து கொண்டு இருக்கிறோம்.நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது!
நேற்றைய முன்தினம் ஜித்தா காயல் நற்பணி மன்ற பொதுகுழுவில் இந்த நிர்வாகத்தைப்பற்றி பேசும் பொழுது இந்த நிர்வாகத்தால் நாம் இழந்த விலைமதிக்க முடியாத உயிர்களின் உருவங்கள்தான் மனக்கண்முன் தோன்றியது.பேசமுடியாமல் துக்கத்தால் தொண்டை அடைத்துக்கொண்டு வார்தைகள் வராமல் வதைத்து நின்றதை அந்த நிகழ்ச்சயில் கலந்திருந்த அத்தனை ஆண்களும் பெண்களும் அனுதாபத்துடன் அவதானித்தார்கள்!
ஆகவே,அன்பு காயல் நெஞ்சங்களே அந்த மிருக பலம் கொண்ட ஆலையை நாம் அசைக்க வேண்டுமென்றால் நாம் அனைவர்களும் ஒற்றுமையாய் ஓரணியில் நின்று நாம் ஏற்படுத்தி இருக்கின்ற "KEPA 'அமைப்புக்கு உடலாலும் உள்ளதாலும் பொருளாலும் உதவிசெய்து ஒத்துழைக்க வேண்டும்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross