வேதனையின் விளிம்புக்கு பயணமாகிற உணர்வு! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[08 September 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37107
கொடிய உயிர்க்கொல்லி புற்றுநோய் தாக்கத்தால் பல நமதூர்மக்களை இழப்பதற்கு DCW ஆலை தான் முக்கிய காரணம் ஏன் முதன்மைக் காரணமாககக்கூட இருக்க பல முகாந்தீரமிருக்கிறது என்ற ஆதரங்களை மக்கள் முன் விளக்கி மனித சங்கிலி போராட்டத்தை ஊர்மக்கள் ஒட்டுமொத்த ஒற்றுமையுடன் செய்து முடித்தோம்!
அந்த நேரத்தில் என் மனதில் பட்டது,இந்த போராட்டத்தில் வஜீஹா கல்லூரி கலந்திருக்கலாமே என்று எண்ணினாலும், ஏற்கனவே நாம் தெரிவித்த "வைகோ" வரவேற்ப்பு எதிர்ப்பின் எதிரொலியால் அந்த நிர்வாகம் இதை செய்ய முன்வந்திருக்காது என்று எண்ணி என் மனதினுள் பாராட்டி மகிழ்ந்தேன்.
ஆனால் அந்த மகிழ்ச்சி புலுபூச்சிபோல நசுங்கி நாசமாகி விட்டது.இந்த செய்தியைப்படிக்கும் பொழுது,
உயிர்க்கொல்லி நோயால் எத்தனை நம் இனமக்களை, உறவுகளை,உற்ற நண்பர்களை பதக்கத் துடிக்க பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம்,இதற்கு மூல காரணங்களில் ஒன்று அந்த ஆலையிலிருந்து வரும் கழிவு நீர்க்கிருமிகளின் தாக்கம்தான் என்று நாம் மட்டுமல்ல பல இணையதளங்களும் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி செய்திகளும் சொல்லியவண்ணமாக இருக்கும்பொழுது அந்த ஆலையை அப்படியே தனிமைப்படுத்தி எவரும் எற்றுகூடப்பார்க்காமல் இருக்ககூடிய நிலைக்கு தள்ளி அது தன தவறை உணர்ந்து திருந்தவேண்டும் அல்லது திருத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு காயல் குடிமக்களுக்கும் இருந்து கொண்டிருக்கின்ற இவ்வேளையில்,
அந்த நச்சுஆலையை உற்சாகப்படுத்தும் முகமாக நமதூரின் ஒரே ஒரு பெண்கள் கல்லூரியின் நிர்வாகம் அனைத்து மாணவி களையும் அந்த ஆலைக்கு அழைத்து செல்வது,அந்த ஆலை நிவாக தலைவருக்கு தமது கல்லூரியில் தங்கப்போர்வை போர்த்தி பாராட்டுதலை தெரிவிப்பதுமாகிய இச் செயலைப் பார்க்கும் ஏனைய ஊர்க்காரர்கள் நம் முகத்தில் காரி உமிழ மாட்டார்களா? எத்தரப்பினர் செய்வது உண்மை என்று குழம்பிப்போக மாட்டார்களா?
ஒரு கல்லூரியை நடத்தும் நிர்வாகமே அதன் பொருப்பாசிரியர்களே உங்களுக்குமா ஒன்றும் தெரியவில்லை?. அல்லது போக்கதவர்கள் போராட்டம் செய்வார்கள் அதையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்ற இறுமாப்பா?
ஊர்மக்கள் மந்தைகள்போல் மதிமறந்து முச்சந்தி முதல் முதன்மை சாலைவரை மனிதசங்கிலியால் சங்கமித்தவர் களுக்கு அக்கல்லூரி நிர்வாகம் பதில் சொல்லியே ஆக வேண்டும்!
அன்பு மாணவிகளே உங்கள் அக்கம்பக்கத்து சகோதர சகோதரிகள் பலபேர்கள் இக்கொடிய நோயால் உங்களை விட்டு சென்றிருக்கிறார்கள். வாழ வேண்டிய வயதினரையும் வாரிக்கொடுத்து விட்டு இருக்கிறோமே இதற்க்கு முக்கிய காரணங்களில் ஒன்று அந்த ஆலையின் கழிவு நீர் கிருமிகளின் தாக்கம் தான் என்று ஆதாரத்தோடு அவர்களுக்கு அளித்து அவ்வாலையை எதிர்த்து போராடிக்கொண்டிருகின்ற உண்மை உங்களுக்கு தெரியாதா?
அப்படித்தெரிந்திருந்தும் அவ்வாலை க்கு ஆதரவு தரும் வகையில் முகாம் என்ற பெயரால் அங்கு செல்லலாமா?அல்லது அங்கு செல்லத்தான் வேண்டும் என்று நிர்வாகம் நிர்பந்தித்ததா? பகுத்துணர்வும் பாவையர்களே,நீங்கள் நமது மக்களின் நோய்த்துயரத்தை நுகரத் தெரிந்த உங்களுக்கு இந்த நிர்வாக ஆணையிலிருந்து நகரத்தெரியவில்லையா?
நாங்கள் நமதூர் மக்களுக்காக பாடுபடுபவர்கள் என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு பலர்,அரசியல் வாதிகள் முதல் ஆட்சிமன்ற தலைவர் உட்ப்பட,பல வார்டு உறுப்பினர்கள், வார்டு தேர்தல் கள வேட்பாளர் வரை DCW வை நேரிடியாகவும், மறைமுகமாகவும் ஆதரித்து வருகிறார்கள் என்ற வேதனை செய்தி வந்து கொண்டிருக்கிறது, அச் செய்திகள் அனைத்தும் உண்மையானால்அல்லாஹ்விற்குஅஞ்சிக்கொள்ளுங்கள்,
அந்த ஆட்க்கொல்லி நோய் ஆட்களை அடையாளம் கண்டு அணுகாது,நாளைக்கு யாருக்கும் எவருக்கும் வரலாம். கேவலம் தற்காலிக பொருளுக்காகவும்,பதவிக்காகவும் நம் மக்களை வாழ்வாங்கு வாழக்கூடியவர்களை வாரிக்கொடுத்து அந்த நச்சு ஆலையை வாழ வைக்க முயலாதீர்கள்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross