அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!!! தாங்கள் ஓர் மலையையே நகர்த்தி உள்ளீர்கள். இது ஓர் சாதாரண விஷயம் அல்ல! புற்று நேய் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல பட்ட பாடுகள், மேற்கொண்ட சிரமங்கள், எடுத்துக்கொண்ட முயற்சிகள், அப்பப்பா! சொல்லி மாளாது,
நல மன்றத்தின் ஏக மனதோடு டாக்டர் எம்.ஏ.முஹம்மத் ஜியாத் அபூபக்கர் அவர்களை, அவருக்குத் தெரியாமலேயே அவரை துனைத் தலைவராக நாங்கள் தேர்வு செய்தோம்! பண்பாடு மிக்க பகுத்தறிவாளர், மக்களுக்கும், மார்க்கத்திற்கும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு உள்ளவர், மேலும் அருமைச் சகோதரர் தலைவர் குளம் அஹமது மைதீன் காக்கா, ஆடிட்டர் மூஸா காக்கா, அரும் பாடுபட்டு சீடி வெளிவரக் காரணமாக இருந்த அன்புத் தம்பி முஜாஹித், ஆற்றல் மிக்க சேவை செய்யும் இரட்டையர்கள் சட்ணி மீரான், ஹில்ட்டன் இபுறாஹீம் காக்கா, டெக்னிக்கல் சப்போர்ட் வல்லுநர் ஹில்ட்டன் ஸாலிஹ் காக்கா, மற்றும் நல மன்றத்தின் அஸ்த்திவாரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து அங்கங்களும் தமது அயராத உழைப்பால் அரும்பாடு பட்டுதான் இந்த புற்றுக்கு ஓர் முற்று வைக்க முன்வந்தனர்.
முயற்சி திரு வினையாக்கும் என்பது போல் எதிபார்த்தற்கும் மேலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இம் மாமன்றத்தின் சேவைகள் மென்மேலும் சிறந்து விளங்க இருகரம் ஏந்துகின்றேன்!இறைவனிடம்! யா!அல்லஹ் அருள் பாலிப்பாயாக! ஆமீன்!யா ரப்பல் ஆலமீன்!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross