தம்பி முஹம்மத் மொஹிதீன் உடைய ஆக்கம் அருமையிலும் அருமை posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[11 September 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37172
இப்போதுள்ள இளைஞர்கள் இதைப்படித்தால் என்னமோ கிரிக்கி இருக்கிறாரே,இதெல்லாம் என்ன என்று கேட்கும் அளவிற்கு இந்த விளையாட்டெல்லாம் ஒரேடியாக ஓடிஒழிந்து மறைந்து விட்டது!
இவையெல்லாம் வெறும் விளையாட்டுமட்டுமல்ல,அதை விளையாடும் பொழுது ஏற்பட்ட இனபுரியா சந்தோசம் உற்சாகம் அதை வாழ்நாளில் எப்பொழுது நினைத்துப்பார்த்தாலும் ஒரு ஏக்கம் கலந்த ஏமாற்றம்.இந்த இளமைபருவத்திற்கு திரும்ப
எந்த வழியும் இல்லையா என்னிறைவா என்று நடக்க முடியா அந்த பசுமை கால நினைவுக்காக நம் மனதை பைத்தியமாக்கும் உணர்வு.
ஆனால் இப்பொழுதுள்ள இளைஞர்களிடம் என்னத்தை பார்க்கமுடிகிறது, இருபத்திநாலுமணி நேரமும் கைப்பேசியும் கனணியை கைப்பிடித்தலும் தான் அவர்கள் பொழுதுபோக்கு உலகம், விளையாட்டு, இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து அவர்கள் இளமைபருவத்தை எண்ணிப்பார்த்தாலும் அதில் வெறும் வெறுமையையும்,எந்த மகிழ்வும் இல்லாமை என்ற இயந்திர இயக்க நிகழ்வைத்தான் அவர்களால் குறிப்பிட முடியும்!
தம்பி முஹம்மத் மொஹிதீன் உடைய ஆக்கம் அருமையிலும் அருமை. என்னை எங்கேயோ இழுத்துக்கொண்டு போனது மட்டுமல்ல எதைஎதையோ நினைத்து இனம் புரியா மகிழ்வில் மிதந்த நான் ,அப்படியா அசந்து விட்டேன் அரைத்துளி ஆனந்த கண்ணீர் விழிக்கதவை திறந்து வெளியே எட்டிப்பார்த்து விட்டது. என்னிதைய பாராட்டுக்கள் தம்பிக்கி. இன்னும் எழுது ஏனைய தலைப்புக்களில்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross