அஷ்ரப் அவர்களை தோற்கடிக்க, தலைவி முயற்சி பண்ணத்தான் செய்வார் என்று ஒப்புக்கொண்ட தலைவியின் ஆதரவாளர்களுக்கு நன்றி! posted bysaalai Abdul Razzaq Lukman (Chennai)[13 September 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 37214
"கேள்விகளே வேடிக்கையாக உள்ளன. போட்டி என்று வந்த பிறகு, “நீ ஏன் இப்படி வெற்றி பெற முயற்சி செய்றே”ன்னு கேட்கிறது வேடிக்கையா இல்லையா? “நீ ஃபெயில் ஆக வேண்டியதுதானே, ஏன் பாஸ் ஆக முயற்சி செய்கிறாய்?” என்ற கேள்விகள் அபத்தம். அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் வேட்பு மனுவை நிராகரிக்க வைத்தாரா? அப்புறம் என்ன? சட்டப் புத்தகத்தைக் கொடுப்பதும், தாசில்தாரிடம் விளக்கம் கேட்பதும் குற்றம்னா - என்னன்னு சொல்ல உங்கள் எதிர்ப்பார்ப்பை?" (C&P)
தம்பி ஹாமீத் ரிபாயி அவர்களின் இந்த பதிலை தலைவி அவர்கள் சொல்லி இருந்தால் பிரச்சனையே இல்லையே. தான் அப்படி ஜமாஅத் வேட்பாளருக்கு எதிராக நடக்கவே இல்லை என்பது போல் அல்லவா அவரின் பதில் இருக்கிறது.
தான் சார்ந்திருக்கும் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அவருக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால், அந்த ஜமாஅத் வேட்பாளரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்வதிலும், அவரை தோற்கடிப்பதிலும், அதிமுகவின் மற்ற உறுப்பினர்களை விட இவர் அதிகம் அக்கறை செலுத்துவதை தான் அந்த ஜமாஅத்தினரால் போருக்க முடியவில்லை. அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலும் இல்லை.
"1வது வார்டை என்ன பட்டாவா போட்டு கொடுத்திருக்காங்க? அமலக்கனி நின்னா என்ன? அப்துல்காதர் நின்னா என்ன? அந்த வார்டு மக்கள் பார்த்துக்குவாங்க" (C&P)
எந்த ஒரு பதவியும் யாருக்கும் பட்டா போட்டு கொடுக்கப்பட வில்லை. தலைவி பதவி உட்பட. 2006 தேர்தலில் இந்த வார்டில், அருனாசலபுரத்தை சார்ந்த, பொதுவுடைமை கட்சியின் திரு.திருத்துவராஜ் அவர்கள் தான் வெற்றி பெற்றார். ஒரு விஷயம் பொது தளத்தில் விவாதத்துக்கு வந்தால், அந்த விஷயத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து பதியத்தான் செய்வார்கள். வெற்றியை அந்த வார்டு மக்கள் தீர்மானிக்கட்டும்.
அஷ்ரப் அவர்களின் வெற்றி / தோல்வி விஷயத்தில், தலைவிக்காக வக்காலத்து வாங்கும் சகோதரர்களின் நிலைப்பாடு தெரிந்தால் நன்றாக இருக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross