ஊடகம் எடுத்த பேட்டியின் ஆடியோ வெளியிட்டால் மிக நன்று.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[16 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37268
முதலில் எனக்கு ஒரு நம்பகத்தன்மையான ஒரு விசியம் மட்டும் வெளியிடபடனும் / வெளிபடனும் அதாவது அமலக்கனி என்ற அ தி மு க வேட்பாளரின் பேட்டியின் போது உரையாடப்பட்ட ஆடியோ அதை வைத்துதான் முழுமையாக நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்..
இன்று நகர்மன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் சிலர் DCW ஆலைக்கு சென்று அங்கு உள்ள DCW நிர்வாகத்தின் அனுசரணையில் கேண்டீனில் மதிய உணவு மற்றும் காலை சிற்றுண்டி பருகி + செலவுக்கும் வாங்கி வருவதாக வெளியில் பேச படுகிறது ஆனால் அதற்க்கான ஆதாரம் ஏதுமில்லை.. உறுப்பினர்களின் மேல் உள்ள ஆதங்கத்தில் / உறுப்பினருக்கு வேண்டாதவர்களின் பரப்புரையாக இருக்ககூடும் என்பதால் ஒரு முடிவுக்கு நம்மால் வர முடியவில்லை - ஆகையால் இந்த அமலகனியின் விசியங்களில் நமக்கு ஏதும் ஆதாரமாக கோமான் ஜமாத் அல்லது அமலகணியை விமர்சித்த (பேட்டி எடுத்து செய்தி கொடுத்த ஊடகம்) தரப்பில் ஆடியோ பதிவு இருக்குமானால் அமலகனியை பற்றி நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்..
மேலும் கோமான் ஜமாத் எதை ஆதாரமாக வைத்து KEPA விடம் விளக்கம் கேட்க்கிறது...?
(1) நகரின் ஒரு ஊடக செய்தியின் ஆதாரமா..! அல்லது
(2) அமலகனியுடனான நகரின் ஒரு ஊடகத்தின் பேட்டியின் போது பதிவு செய்யப்பட்ட ஆடியோ ஆதாரமா..!
ஊடக செய்தி ஒன்றே ஆதாரம் என்று வைத்து மட்டும் கோமான் ஜமாத் ஒரு முடிவுக்கு வருவது சரியில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.. ஏன் என்றால் அன்று கடந்த 2011 நகர்மன்ற தலைவர் போட்டி தேர்தலில் சில ஊடகம் / அமைப்பு / சங்கங்கள் / காயல்பெயர் கொண்ட சமூக ஆரவலர்கள் என்று பல பிரிவுகளாக ஒருவர் / ஒருவர் மீது விமர்சனங்களையும் / அறிக்கைகளையும் வாக்கு வங்கிக்காக / ஓட்டுக்காக...! தான் விரும்பும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்றும்.. மாற்றுரு பிரிவு தான் விரும்பும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்றும் ஒருவர்.. ஒருவர் மீது குற்றச்சாட்டு தொடர்ந்து பிறகு ஒரு முடிவு ஏற்பட்டது..!
அன்று தோல்வியை சந்தித்த சிலர் ஆதங்கத்தில் இன்று ஆதாரமில்லாத செய்தியை வெளியிட்டு தனது உள் மன ஓட்டத்தை சாதிக்க ஊடக வாயலாக வெளிப்படுத்தி இருக்கலாம் அல்லவா...
முதலில் இதை நாம் தெளிவாக விளங்க வேண்டும்...!
குறிப்பு:- நான் இது மாதிரி சில விளக்கங்களை கேட்பதால் / பதிவதால் நான் கோமான் ஜமாத் வேட்பாளருக்கு எதிராணவனோ.. (அல்லது) அமலகனிக்கு ஆதரவாணவனோ அல்ல.. அது 1 வது வார்டு மக்களின் முடிவு.. அது அவர்களுக்கு தேவையான கட்டமைப்பு.. அதில் எவரை ஆதரிப்பது / எவரை நிராகரிப்பது அது 1 வது வார்டு மக்களின் முடிவு / உரிமை..
நான் கவலை படுவது எல்லாம் என்னவென்றால் இந்த கருத்து பரிமாற்ற விவாதம் / அறிக்கை / செய்தி / நமது ஊரின் ஒட்டுமொத்த எதிராளிக்கு DCW க்கு சாதகமாக அமைந்து விட கூடாது என்பது மட்டுமே... என் வருத்தம்..
இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக..ஆமின்..
மேலும் இந்த தேர்தலில் / தன்னை பயன்படுத்தி சுய நல ஆதாயம் அடைய முற்படும் (1 வது வார்டுக்கு சம்பந்தமே இல்லாத) எவராக இருப்பினும் அல்லாஹு அவனுக்கு தோல்வியை அளித்து அவனின் உண்மை முகத்தை வெளிகட்டுவானாக... விரைவில்... ஆமின்..
கருத்து பதிவில் ஏதும் தவறுகள் இருப்பின்... கோமான் ஜமாத் சகோதரர்கள் மன்னிக்கவும் - தவறை சுட்டி காட்டவும்... வஸ்ஸலாம்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross