காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) தலைவர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு - கோமான் ஜமாஅத் பெயரில், கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
1. தலைப்பே சரியில்லையே? posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்)[15 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37267
இந்த கடிதம், அந்த ஜமாஅத் லெட்டர் பேடில், தலைவர் கையெழுத்துடன் அல்லவா வந்துள்ளது. அது ஜமாஅத் சார்பாக வந்த கடிதமாகவே பார்க்க வேண்டும்.
ஆனால், 'தலைவர் பெயரில்' கடிதம் என்று போடுவது, ஏதோ மொட்டைக் கடிதம் வந்தது போலல்லவா உங்கள் செய்தியின் தலைப்பு உள்ளது. நான் பதிந்தது தவறாக இருந்தால், விளக்கம் சொன்னால், திருத்திக் கொள்கிறேன்.
KEPA வின் பொறுப்பில் உள்ள சிலர், அந்த நச்சு ஆலையின் ஆதரவாளராக செயல்படும் திருமதி.அமலக்கனிக்கு ஆதரவாக, நேரடியாகவும், மறைமுகமாகவும் செயல்படுவதால், அதற்கு KEPA பொறுப்பாகாது. அந்த இயக்கத்தின் உளத்தூய்மை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.
இருப்பினும், KEPA வின் நிர்வாக கூட்டத்தில் இது பற்றி விவாதிப்பது, எதிர்காலத்தில் இந்த இயக்கத்தை பற்றிய தவறான சமிஞ்சைகளுக்கு இடம் கொடுக்காமல் இருக்க உதவும்.
2. ஊடகம் எடுத்த பேட்டியின் ஆடியோ வெளியிட்டால் மிக நன்று.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[16 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37268
முதலில் எனக்கு ஒரு நம்பகத்தன்மையான ஒரு விசியம் மட்டும் வெளியிடபடனும் / வெளிபடனும் அதாவது அமலக்கனி என்ற அ தி மு க வேட்பாளரின் பேட்டியின் போது உரையாடப்பட்ட ஆடியோ அதை வைத்துதான் முழுமையாக நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்..
இன்று நகர்மன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் சிலர் DCW ஆலைக்கு சென்று அங்கு உள்ள DCW நிர்வாகத்தின் அனுசரணையில் கேண்டீனில் மதிய உணவு மற்றும் காலை சிற்றுண்டி பருகி + செலவுக்கும் வாங்கி வருவதாக வெளியில் பேச படுகிறது ஆனால் அதற்க்கான ஆதாரம் ஏதுமில்லை.. உறுப்பினர்களின் மேல் உள்ள ஆதங்கத்தில் / உறுப்பினருக்கு வேண்டாதவர்களின் பரப்புரையாக இருக்ககூடும் என்பதால் ஒரு முடிவுக்கு நம்மால் வர முடியவில்லை - ஆகையால் இந்த அமலகனியின் விசியங்களில் நமக்கு ஏதும் ஆதாரமாக கோமான் ஜமாத் அல்லது அமலகணியை விமர்சித்த (பேட்டி எடுத்து செய்தி கொடுத்த ஊடகம்) தரப்பில் ஆடியோ பதிவு இருக்குமானால் அமலகனியை பற்றி நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்..
மேலும் கோமான் ஜமாத் எதை ஆதாரமாக வைத்து KEPA விடம் விளக்கம் கேட்க்கிறது...?
(1) நகரின் ஒரு ஊடக செய்தியின் ஆதாரமா..! அல்லது
(2) அமலகனியுடனான நகரின் ஒரு ஊடகத்தின் பேட்டியின் போது பதிவு செய்யப்பட்ட ஆடியோ ஆதாரமா..!
ஊடக செய்தி ஒன்றே ஆதாரம் என்று வைத்து மட்டும் கோமான் ஜமாத் ஒரு முடிவுக்கு வருவது சரியில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.. ஏன் என்றால் அன்று கடந்த 2011 நகர்மன்ற தலைவர் போட்டி தேர்தலில் சில ஊடகம் / அமைப்பு / சங்கங்கள் / காயல்பெயர் கொண்ட சமூக ஆரவலர்கள் என்று பல பிரிவுகளாக ஒருவர் / ஒருவர் மீது விமர்சனங்களையும் / அறிக்கைகளையும் வாக்கு வங்கிக்காக / ஓட்டுக்காக...! தான் விரும்பும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்றும்.. மாற்றுரு பிரிவு தான் விரும்பும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்றும் ஒருவர்.. ஒருவர் மீது குற்றச்சாட்டு தொடர்ந்து பிறகு ஒரு முடிவு ஏற்பட்டது..!
அன்று தோல்வியை சந்தித்த சிலர் ஆதங்கத்தில் இன்று ஆதாரமில்லாத செய்தியை வெளியிட்டு தனது உள் மன ஓட்டத்தை சாதிக்க ஊடக வாயலாக வெளிப்படுத்தி இருக்கலாம் அல்லவா...
முதலில் இதை நாம் தெளிவாக விளங்க வேண்டும்...!
குறிப்பு:- நான் இது மாதிரி சில விளக்கங்களை கேட்பதால் / பதிவதால் நான் கோமான் ஜமாத் வேட்பாளருக்கு எதிராணவனோ.. (அல்லது) அமலகனிக்கு ஆதரவாணவனோ அல்ல.. அது 1 வது வார்டு மக்களின் முடிவு.. அது அவர்களுக்கு தேவையான கட்டமைப்பு.. அதில் எவரை ஆதரிப்பது / எவரை நிராகரிப்பது அது 1 வது வார்டு மக்களின் முடிவு / உரிமை..
நான் கவலை படுவது எல்லாம் என்னவென்றால் இந்த கருத்து பரிமாற்ற விவாதம் / அறிக்கை / செய்தி / நமது ஊரின் ஒட்டுமொத்த எதிராளிக்கு DCW க்கு சாதகமாக அமைந்து விட கூடாது என்பது மட்டுமே... என் வருத்தம்..
இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக..ஆமின்..
மேலும் இந்த தேர்தலில் / தன்னை பயன்படுத்தி சுய நல ஆதாயம் அடைய முற்படும் (1 வது வார்டுக்கு சம்பந்தமே இல்லாத) எவராக இருப்பினும் அல்லாஹு அவனுக்கு தோல்வியை அளித்து அவனின் உண்மை முகத்தை வெளிகட்டுவானாக... விரைவில்... ஆமின்..
கருத்து பதிவில் ஏதும் தவறுகள் இருப்பின்... கோமான் ஜமாத் சகோதரர்கள் மன்னிக்கவும் - தவறை சுட்டி காட்டவும்... வஸ்ஸலாம்..
3. Re:... posted byMuthu Magdoom VSH (jeddah)[16 September 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37269
Why the heading as "koman jamath peyaril"? Is this the letter from unknown source? Thanks to Almighty Allah to reveal your website's face of a side day by day.
நல்ல ஜமாஅத்துகள் கூட அந்நியர்களின் ஊடுருவலால் தம்மையும் அறியாமல் தங்களது தனித்தன்மையை எவ்வாறு இழந்துவிடுகின்றன என்பதற்கு, கோமான் ஜமாஅத்தின் இந்த அறிக்கை மட்டுமல்ல! இதற்கு முன் வெளிவந்த முந்தைய அறிக்கைகளும் உதாரணங்களே!
/* இல்லையான்றால் KEPA ன் நம்பகத் தன்மையின் மீதே மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு விடலாம் */ CP
அரசியல் கட்சி சார்பின்மை, உள்ளூர் பூசல்களில் தலையிடாது தன் பணியை செவ்வனே செய்து வரும் KEPA மீது களங்கம் ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் தீவிர முயற்சியின் வெளிப்பாடே இந்த அறிக்கையின் வாசகம்.
தேர்தலில் வெற்றி பெற கண்ணியத்திற்குரிய தங்கள் ஜமாஅத்தின் பெயரில் வெளியிடப்பட்டு வரும் இந்த தொடர் அறிக்கைகள் - ஜமாஅத்துக்கான கண்ணியத்துடன் இல்லை.
தேர்தலில் தோற்று விடுவோமோ என்ற அச்சத்தில், யாரின் பெயரில் வாசகங்களை எழுதுகிறோம் என்பதைக் கூட மறந்து எழுதும் ஒரு சில அந்நியர்களின் கை வண்ணங்களே அவை என்பதை - சிறு அறிவு உள்ளவர் கூட உணர முடியும்.
தேர்தல் முடிந்த பிறகாவது, இந்த அந்நியர்களுக்கு இடமளித்ததால் நடந்தவற்றை மீளாய்வு செய்ய கண்ணியத்திற்குரிய கோமான் ஜமாஅத் கடமைப்பட்டுள்ளது.
/*இவர் DCW ஆலையின் தீவிர ஆதரவாளர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.*/ CP
இப்படி மொட்டையாக வாசகம் கொடுத்திருப்பதைத் தவிர்த்து, தங்கள் கடிதத்தின் இடது கீழ்ப்பகுதியில், “இணைப்பு” என்று எழுதி - ஆதாரம் 1, ஆதாரம் 2, ஆதாரம் 3 என தாங்கள் இணைத்திருந்தால் தங்கள் கூற்றின் உண்மைத் தன்மையை நம்பலாம்.
தேர்தல் முடியட்டும்! நீங்கள் மறந்தாலும், KEPA இந்த கடிதத்தை மறக்க கூடாது!! இக்கடிதத்தை வழங்கியவர்களை அழைத்து ஆதாரங்களை சமர்ப்பிக்கக் கூறவேண்டும். அப்போது, இல்லாத ஒன்றை பெரிதாக்கினார்களா - இல்லையா என்ற உண்மை வெளிவரும். யாரின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் என்பதை அன்று காணலாம்.
மொத்தத்தில், “ஜமாஅத் கட்டமைப்பு” தொடர்பாக நான் எதை அச்சப்பட்டு என் முந்தைய கருத்தில் பதிவு செய்திருந்தேனோ அது நடந்துகொண்டிருக்கிறது.
குறுகிய நோக்கம் கொண்டவர்களுக்கு, தாம் நினைத்தது நடக்க வேண்டும் என்ற ஒன்றுதான் குறியாக இருக்கும். அதற்காக எதையும் பலி கொடுப்பார்கள். பலி கொடுக்கப்படுவது ஜமாஅத்தாகக் கூட இருக்கும் என்பதற்கு இந்த அறிக்கை சான்று.
என்னைப் பொருத்த வரை, “ஜமாஅத் ஒற்றுமை” எனும் பெயரில் நடைபெறும் போலியான - திரைமறைவு தகிடுதத்தங்கள் ஒழிக்கப்பட்டு, ஒரு ஜமாஅத்தின் உண்மையான கட்டுக்கோப்பும், கண்ணியமும் காக்கப்பட வேண்டும் என்பதே - இதுவரை நிறைவேறாத எனது ஆசை!
5. Re:... posted byPirabu Zainul abdeen (Dubai)[16 September 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37272
அதென்ன கோமான் ஜமாஅத் பெயரில் கடிதம். ஏன் அந்த நிர்வாகிகளுக்கு ஊரின் நிலை பற்றி தெரியாத ??? அவங்களுடைய கருத்தை சுயமாக சிந்திக்க தெரியாத ???அவங்களுக்கு யாரோதான் எழுதி கொடுக்கனுமா ?? என்ன நினைத்து கொண்டு இருக்ரீர்கள்.
இதெற்கு ஆதரவாகவும் பல அபிமானிகள். காயல்பட்டணம் .com நல்ல ஒரு நீதமான ஊடகமாகத்தான் இருகின்றது யாரு மேல் வெறுப்போ தெரிய வில்லை சில நேரம் இது போன்று வஞ்சகத்தை கக்கிவிடுகின்றது.
இப்போதுள்ள இடை தேர்தலில் மட்டும் ஜமாஅத் ஓற்றுமையை எதிர்பார்கிறேன், நிறைவேறாத ஆசை என்றாம் என்றெல்லாம் போலம்பும் சில் ஆசாமிகள் கடந்த தேர்தலில் தைகள் எடுத்த நிலைபாட்டை சற்று சிந்திக்க நேரம் இது.
என்னுடைய இந்த கருத்தை நீங்கள் பதியாவிட்டால் தயவு செய்து இந்த வலைத்தளத்தில் அபிமானிகளின் கருத்தை மட்டும் வெளியிடுவோம் என்று செய்தியிட்டு அவர்களின் பெயர்களையும் தெரிவிக்கவும். நாங்கள் எங்கள் கருத்தை தெரிவிக்க மாற்று வழியை பார்த்துகொள்கிறோம்.
7. Re:...எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்... posted bymackie noohuthambi (chennai)[16 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37277
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
கோமான் ஜமாஅத் கடிதம் அது எந்த உருவில் வந்துள்ளது என்று ஆராய்வதைவிட கடிதத்தில் உள்ள செய்தி உண்மைதானா என்பதை புலன் விசாரணை செய்வதில் தவறில்லை. ஓட்டுக்காகவும் கேட்கலாம்.
அமலக் கன்னி வெற்றி பெற்றால் அது அமல செடிபோல் யாருக்கும் பயன்படாமல் போகலாம். நெல்லையில் தொல்லை கொடுக்கிறார்கள் என்று சொல்லி மேயர் வேட்பாளர் களத்திலிருந்து பின்வாங்கிய பிறகு அடுத்தநாளே குடும்பத்துடன் ஆளும் கட்சியில் புரட்சி தலைவியின் நல்லாசியுடன் இணைந்து ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்கள். பல ஊராட்சிகளிலும் இந்த நிகழ்சிகள் நடந்தேறி இருக்கின்றன. ஊழல் என்பது முற்றிலுமாக ஒளிந்து விடுவதில்லை. அது காலத்துக்கு காலம் கை மாறும் - இடம் மாறும் - ஆட்சி மாற்றங்களால் அந்த ஊழலை ஒழிக்க முடியாது.
மன மாற்றம் - இறைவனுக்கு பயப்படுதல் - மன சாட்சிக்கு பயப்படுதல் இவைகளால் மட்டுமே அதை முடிவுக்கு கொண்டு வர முடியும். மற்றப்படி KEPA வில் உள்ளவர்களில் சிலர் DCW க்கு துணை போகிறார்கள் என்று பேசுவதும் நமது நகர் மன்ற தலைவியே DCW வை எதிர்த்துப் பேசுவதும் DCW ஆதரவு நிலைப்பாடு உள்ள வேட்பாளரை ஆதரித்து பேசுவதும் வருத்தம் தரும் செய்தியே தவிர ஒன்றும் ஆச்சரியப் பட வேண்டிய செய்தி அல்ல.
காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியும் அப்பா..கைக்கு கை மாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே...
8. Re:... posted byansari (abu dhabi)[16 September 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37280
ஜனாப் ஹாமித் ரிபாய் அவர்கள் எங்களுக்கு கண்ணியம் சொல்லி தந்துதான் நாங்கள் நடக்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசியத்திலும் அவசரத்திலும் இல்லை/
அடுத்தவர்கள் பலி கொடுக்கும் அளவிற்கு நாங்கள் என்ன பலி கிடாவும் இல்லை. எங்களை பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும் எங்கள் கணியமும் கட்டு கோப்பும் /அமல கனி அவர்கள் அந்த நச்சு ஆலைக்கு ஆதரவாக செயல் பட்டது வெள்ளிடை மலை. இதில் உங்களுக்கு என்ன ஆதாரம் வேண்டும்?
இந்த இணையதளம் சொல்லும் எல்லா விஷயத்திற்கும் ஆதாரம் தந்தா வெளியிடுகிறது /ஜனாப் லுக்மான் அவர்களை பற்றியும் இந்த அம்மா சொல்லும் பொது தீய சக்தி என்று சொல்லும் பொது ஆதாரம் கேட்காமல் எங்கே போனிர்கள்? அல்லது ஊரில் குழப்பம் உண்டாகிய போது தனக்கும் ஒரு நகை கடை அதிபருக்கும் உள்ள தனி பட்ட பிரச்சனையை நகர் மன்றத்தில் கொண்டு வந்து நகர் மன்றத்தை நகரா மன்றமாக மாத்தும் போது எங்கே போனிர்கள் ?
அம்மா மாறி மாறி அறிக்கை விட்டது எல்லாம் யாருடைய எழுத்து? எங்களுக்கு ஒழுக்கம் மற்றும் பண்பாட்டை சொல்லி தரும் இடத்தில தாங்கள் இல்லை. அது எங்கள் ஜமாத்திற்கு உங்களை போன்றவர்களிடம் இருந்துதான் கற்று கொள்ள வேண்டிய அவசியத்திலும் இல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross