காயல்பட்டினம் நகராட்சியின் 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிடம் உட்பட - தூத்துககுடி மாவட்டத்தில் வெற்றிடமாக உள்ள அனைத்து உள்ளாட்சிப் பொறுப்பிடங்களுக்கும் இம்மாதம் 18ஆம் நாளன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் பரப்புரை இம்மாதம் 16ஆம் நாளன்று 17.00 மணியுடன் நிறைவுறுவதாக, தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும் - மாவட்ட ஆட்சியருமான ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைத்தின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 18.09.2014 வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ள - ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் இடங்களில், தேர்தல் பிரச்சாரம் / கூட்டங்கள் 16.09.2014 அன்று மாலை 05.00 மணியுடன் முடிவடைகிறது.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள - ஊரக மற்றும் நகர்ப்புற தேர்தல்கள் நடைபெறும் இடங்களில், 16.09.2014 அன்று மாலை 05.00 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் / கூட்டங்கள் நடத்தக்கூடாது என, தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |