ரியாத் காயல் நல மன்றத்தின் 48வது பொதுக் குழு கூட்டம் செப்டம்பர் 26 அன்று நடைபெறவுள்ளது. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
எமதன்பின் ரியாத் வாழ் காயலர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (RKWA) 48-ஆவது பொதுக்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 26.09.2014 வெள்ளிக்கிழமையன்று மஃரிப் தொழுகைக்குப் பின், ஃபத்ஹா Shifa Al Jaseera Polyclinic Party Hall (3rd Floor) (Opposite to classic party hall)-லில் நடைபெறவுள்ளது.
இப்பொதுக் குழுவின் போது விருப்பம் உள்ளவர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக பொதுக்குழுவில் வைக்கப்பட்டிருக்கும் வெள்ளை கவரில் வைத்து உண்டியலில் போடலாம்.
எனவே, மன்ற உறுப்பினர்கள் மற்றும் காயலர்கள் அனைவரும், இச்செய்தியையே முறையான அழைப்பாகக் கருதி அவசியம் கலந்துகொள்ள வருமாறும், உங்களுக்கு அறிமுகமான அனைத்து காயலர்களையும் இதில் பங்கேற்கச் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இறுதியாக காயல் அறுசுவை உணவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுபெரும் இன்ஷாஅல்லாஹ்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.M. செய்யது இஸ்மாயில்,
ஊடகக் குழு, ரியாத் காயல் நல மன்றம்,
ரியாத் - சஊதி அரபிய்யா.
|