காயல்பட்டினம் நகராட்சியின் 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிடம் உட்பட - தூத்துககுடி மாவட்டத்தில் வெற்றிடமாக உள்ள அனைத்து உள்ளாட்சிப் பொறுப்பிடங்களுக்கும் இம்மாதம் 18ஆம் நாளன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் நடைபெறும் பகுதிகளில், வாக்குரிமை உள்ளோருக்கு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும் - மாவட்ட ஆட்சியருமான ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தமிழதகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்செயல் தேர்தல் நடைபெறும் நாளான - வருகின்ற 18.09.2014 வியாழக்கிழமையன்று, வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக, வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளுக்கு, செலாவணி முறிச்சட்டம் 1881 (Negotiable Instruments Act 1881)இன் படி, அரசால் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 18.09.2014 அன்று, தேர்தல் நடைபெறும் கீழ்க்காணும் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது:-
எனவே, மேற்காணும் பகுதிகளுக்குட்பட்ட வணிகம், வியாபாரம், தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனம் / அமைப்புகளில் பணிபுரியும் மேற்படி பகுதிகளில் அடங்கிய - வாக்குரிமையுள்ள நபர்களுக்கு, தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
மாறாக செயல்படும் நிறுவனங்கள் மீது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கை தெரிவிக்கிறது.
இடைத்தேர்தல் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |