காயல்பட்டினம் நகராட்சியில் வெற்றிடமாக உள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பு உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி மன்ற
வெற்றிடங்களுக்கும் தேர்தல் செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் - ம.அமலக்கனி என்பவர், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சி சார்பாக, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து - சுயேட்சையாக, கோமான் ஜமாஅத் சார்பாக, அரிக்கேன் விளக்கு சின்னத்தில், எஸ்.ஐ.அஸ்ரஃப் என்பவர் போட்டியிடுகிறார்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள்படி, வேட்பு மனுவுடன், வேட்பாளர் குறித்த கல்வி, சொத்து மற்றும் வழக்கு விபரங்கள் அடங்கிய உறுதிச்சான்று (AFFIDAVIT) இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.
மேலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களின் உறுதிச்சான்று படிவ நகல் - தகவல் பலகையில் ஒட்டப்படுவது மட்டும் அல்லாமல், அதன் நகல் எதிர் வேட்பாளர் மற்றும் ஊடகங்களுக்கும் வழங்கப்படவேண்டும் என தேர்தல் ஆணையத்தின் - ஆகஸ்ட் 5, 2014 தேதியிட்ட ஆணை எண் S.O.No. 6/2014/TNSEC/PE-1 தெரிவிக்கிறது.
செப்டம்பர் 4 அன்று வேட்பு மனு தாக்கல் செய்த கோமான் ஜமாஅத் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள சுயேட்சை வேட்பாளர் எஸ்.ஐ.அஸ்ரஃப் சமர்ப்பித்த உறுதிச்சான்று
|