தாய்லாந்து அரசின் சார்பில், அந்நாட்டு தலைநகர் பாங்காக்கில் முவாங் தோன்ங் தானி என்ற பகுதியில் நகை - மாணிக்க 54 ஆவது கண்காட்சிக்கு
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
09.09.2014 முதல் 13.09.2014 வரை நடைபெற்ற இக்கண்காட்சியில், உலகின் பல்வேறு நகை - மாணிக்க
வணிகர்கள் தமது விற்பனையகத்தை அமைத்திருந்தனர். பலர் இக்கண்காட்சியில் கிடைக்கும் அரிய பொருட்களை கொள்முதல் செய்வதற்காக பல
நாடுகளிலிருந்தும் பயணித்து வந்திருந்தனர்.
இக்கண்காட்சியில், காயலர்களின் -
பாங்காக் ஜெம் ஹவுஸ்,
கே.டி. ஜெம் ஹவுஸ்,
ப்ரில்லியண்ட் ஜெம்ஸ் இன்டர்நேஷனல் கம்பெனி லிமிட்டெட்
ஆகிய வணிக நிறுவனங்கள் சார்பிலும் விற்பனையகங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பாங்காக் ஜெம் ஹவுஸ் சார்பில் ஹாஜி வாவு ஷம்சுத்தீன், ஹாஜி வாவு உவைஸ், ஹாஜி வாவு எஸ்.எச்.ரில்வான், டபிள்யு
வாவு எஸ்.எச்.மொகுதூம், வாவு எஸ்.மொகுதூம், வாவு யு.மொகுதூம் ஆகியோர் விற்பனையகத்தை நடத்தினர்.
கே.டி.ஜெம் ஹவுஸ் சார்பில் ஹாஜி செய்யித் முஹம்மத், எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ, மவ்லவீ ஷாதுலீ, ஹாஃபிழ் எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஆகியோர் விற்பனையகத்தை நடத்தினர்.
ப்ரில்லியண்ட் ஜெம்ஸ் இன்டர்நேஷனல் கம்பெனி லிமிட்டெட் சார்பில், வாவு முஹம்மத் அலீ, வாவு காதிர் ஸாஹிப் ஆகியோர் தமது
விற்பனையகத்தை நடத்தினர்.
தகவல் மற்றும் படங்கள்:
கம்பல்பக்ஷ் S.A.அஹ்மத் இர்ஃபான்,
பாங்காக், தாய்லாந்து. |