இந்திய ஹஜ் குழு மூலம் பயணம் செய்து ஹஜ் செய்ய தேர்வாகியுள்ள தமிழக பயணியரின் முதல் குழு நேற்று (செப்டம்பர் 15) சென்னையில் இருந்து சவுதி அரேபியா புறப்பட்டது.
பயணியரை சென்னை விமான நிலையத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துர் ரஹீம், தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மைச் செயல் முனைவர் க.அருள்மொழி IAS, ஹஜ் குழுவின் செயலர் மற்றும் செயல் அலுவலர் முஹம்மது நசீமுதீன் IAS ஆகியோர் உட்பட பலர் வழியனுப்பிவைத்தனர்.

தகவல்:
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை,
தலைமை செயலகம், சென்னை.
|