காயல்பட்டினம் நகராட்சியின் 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிடம் உட்பட - தூத்துககுடி மாவட்டத்தில் வெற்றிடமாக உள்ள அனைத்து உள்ளாட்சிப் பொறுப்பிடங்களுக்கும் இம்மாதம் 18ஆம் நாளன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் நடைபெறும் பகுதிகளில், இன்று முதல் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும் - மாவட்ட ஆட்சியருமான ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்செயல் தேர்தல் வாக்குப் பதிவு 18.09.2014 அன்று நடைபெறுவதை முன்னிட்டு 16.09.2014 அன்று மாலை 5.00 மணி முதல் 18.09.2014 அன்று மாலை 5.00 மணி வரையிலும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 22.09.2014 அன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு அருகிலுள்ள அரசு மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கடத்துதல், மதுபானத்தைப் பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross