“இஸ்லாமிய பார்வையில் நேர மேலாண்மை” எனும் தலைப்பில், இம்மாதம் 21ஆம் நாளன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை, காயல்பட்டினம் துளிர் பள்ளி வளாகத்தில் பயிலரங்கம் நடைபெறுகிறது.
“இஸ்லாமிய பார்வையில் நேர நிர்வாகம்” எனும் நூலின் ஆசிரியரும், “வேர்கள்”, சிறையில் எனது நாட்கள்”, “மனித இனத்திற்கெதிரான குற்றம்”, “இம்பாக்ட் பக்கம்”, தேசியவாதமும், இஸ்லாமும்”, “மனதோடு மனதாய்” போன்ற பல நூற்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்தவருமான - ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் - காயல்பட்டினத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எம்.எஸ்.அப்துல் ஹமீத் இப்பயிலரங்கத்தை நடத்துகிறார்.
நேர மேலாண்மைக்கு இஸ்லாம் அளித்துள்ள முக்கியத்துவம், நேரத்தை வீணடிக்காமல் நன்முறையில் பயன்படுத்துவதெப்படி உள்ளிட்டவற்றை அலசும் வகையில் இக்கருத்தரங்கம் நடைபெறவுள்ளதாகவும்,
குறிப்பிட்ட இருக்கைகளே உள்ளமையால், இப்பயிலரங்கத்தில் பங்கேற்க விரும்புவோர், “+91 89037 30734” என்ற எண்ணைத் தொடர்புகொண்டு பெயர் பதிவு செய்துகொள்ளுமாறும், மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்பயிலரங்கத்தை, துளிர் அறக்கட்டளையுடன், உள்ளூர் இணையதளம் இணைந்து நடத்துகிறது.
தகவல்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |