தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை பூர்விகமாக கொண்ட பிரபல தொழிலதிபர் ஹாஜி எஸ்.சி.எம்.ஜமாலுதீன் இன்று சென்னையில் காலமானார். அன்னார் - ஹாஜி செய்யத் காசீம் மரைக்காயரின் இளைய மகன். அன்னாரின் வயது 74.
அன்னாருக்கு - ரஹீமுநிசா என்ற மனைவியும், அஸ்மா நலீரா அமீன் காசீம் என்ற மகளும், ஷமீம் காசீம் என்ற மகனும், ஷீரீன் அஜ்மல் என்ற மகளும், அன்வர் ஜமால் என்ற மகனும், ஷர்மீளா அஜீஸ் என்ற மகளும் உள்ளனர்.
1966ம் ஆண்டு சென்னையில் MADRAS STEEL TRADING CORPORATION (MSTC) என்ற நிறுவனத்தை துவக்கிய இவர், பின்னர் JAMALS என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தையும் துவக்கினார்.
1996ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை MUSLIM EDUCATIONAL ASSOCIATION OF SOUTH INDIA (MEASI) அமைப்பின் செயலாளராகவும், அவ்வமைப்பு நடத்தும் புதுக்கல்லூரியின் செயலாளராகவும், அஞ்சுமன் அமைப்பின் ஆட்சி குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு ஹஜ் சொசைட்டி அமைப்பின் அறங்காவலர்களில் ஒருவராகவும், சேவை ஆற்றியுள்ளார்.
மேலும் இவர் - SOUTH INDIA IRON AND HARDWARE ASSOCIATION அமைப்பின் தலைவராகவும், TAMILNADU MUSLIM GRADUATES ASSOCIATION (TAMGRADS) அமைப்பின் நிறுவன தலைவராகவும், CREDAI அமைப்பின் துணைத் தலைவராகவும், UNITED ECONOMIC FORUM (UEF) அமைப்பின் நிறுவன பொருளாளராகவும் சேவை ஆற்றியுள்ளார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை மதியம் 12:30 மணிக்கு புதுக்கல்ல்லூரி பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகைக்குப்பின், 1 மணியளவில் சென்னை ராயபேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
[செய்தி திருத்தப்பட்டது @ 10:15pm/17.09.2014] |