சவுதி அரேபியா - ஜித்தா, கடந்த 05.09.2014 வெள்ளிக்கிழமை ஜித்தாவில் நடந்தேறிய ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 81-ஆவது செயற்குழு மற்றும் 32-ஆவது பொதுக்குழு கூட்டம் ஈகைத்திருநாள் சந்திப்பு நிகழ்வாக நடைபெற்றது அதன் விபரங்கள் பற்றி அம்மன்றம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
சவுதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 81-ஆவது செயற்குழு மற்றும் 32-ஆவது பொதுக்குழு கூட்டம் ஈகைத்திருநாள் சந்திப்பு நிகழ்வாக கடந்த 05.09.2014 வெள்ளிக்கிழமை மாலை 06:30 மணியளவில், ஜித்தா - ஷரபியாவில் அமைந்துள்ள இம்பாலா கார்டன் உணவகத்தின் வெளியரங்கில் வைத்து நடைபெற்றது.
வரவேற்பு:
இந்த இனிய நிகழ்விற்கு மன்ற தலைவர் சகோ. குளம் எம்.ஏ.அஹ்மது முஹியத்தீன் தலைமை ஏற்க சகோ.முஹம்மது ஆதம் சுல்தான், சகோ.பொறியாளர்,நெய்னா முஹம்மது, சகோ,பனி,முஹம்மது அலி ஆகியோர் முன்னிலை வகிக்க,சகோ.அல்ஹாபிழ் ,ஏ.ஆர்.அப்துல் ஜலில் இறைமறை ஓதி துவக்க, சகோ.எம்.டபிள்யு. ஹாமித் ரிபாய் வந்திருந்த அனைவரையும் அக மகிழ வரவேற்றார்.
தலைமையுரை:
அடுத்து தலைமையுரையாற்றிய இவ்வமர்வின் தலைவர் சகோ,குளம் எம்.ஏ.அஹ்மது முஹியத்தீன் நாம் இந்த மன்றம் மூலம் செய்யும் நல்ல பணிகளை, பலர் மனமுவந்து பாராட்டி பேசியதையும், இன்னும் நமக்காக பிரார்த்தனை செய்ததையும் காண முடிகிறது. தேவை அறிந்து வறியவர்களின் வாழ்க்கைக்கு நம்மால் முடிந்ததை நாம் மனமுவந்து உதவி செய்யும் போது அவர்கள் நமக்காக இறைவனிடம் வேண்டும் 'துஆ' என்றும் வீண் போவதில்லை.
நாம் நமது சொந்த வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஊர் மக்களின் நலனுக்காக இங்கு ஓன்று கூடியிருக்கிறோம். நாம் ஒன்றுபட்டு செலுத்தும் சிறு சந்தாவானது ஒரு பெரும் தொகையாக தேவையுடைய பல பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் அதன் மூலம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நாம் பெறும் பலன் மிக உயர்வானது எனவே சந்தாக்களை முறைப்படி செலுத்தி இன்னும் கூடுதலாக சேவை புரிந்திட வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் துணை புரிவானாக என்று தனதுரையை நிறைவு செய்தார்.
மன்ற செயல்பாடுகள்:
கடந்த கூட்டங்களின் அறிக்கைகள்,நமதூர் பள்ளிவாயில்களில் இறைப்பணி புரியும் இமாம்கள்.முஅத்தீன்களுக்கு புனித ரமலான் மாத சிறப்பு பரிசாக நமது பங்களிப்பு தொகையாக ரூபாய்,50,000 /: ம் வழங்கியது மேலும் மருத்துவம் மற்றும் உயர் கல்விக்கான உதவி தொகைகள் மன்றம் மூலம் வழங்கிய விபரம் மற்றும் தீர்மானங்களை மன்ற செயலாளர் சகோ.சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான் விளக்கமாக எடுத்துக்கூறினார். பிறகு மக்ரிப் தொழுகைக்குப்பின் மீண்டும் கூட்டம் தொடர்ந்தது.
உலக காயல் நலமன்றங்களின் ஒன்றிணைப்புடன் ஒருமித்தகருத்தொற்றுமையுடன் புதியதாக உதயமாகி நல்ல நிலையில் செயல்பட்டு கொண்டிருக்கும், மருத்துவ கூட்டமைப்பான 'ஷிபா' பற்றிய தற்போதைய நிலை, மற்ற காயல் மன்றங்கள் தந்த கருத்து பரிமாற்றம், அதன் வளர்ச்சி என்பன போன்ற விளக்கங்கள் தந்து, மற்றும் அரசாங்கம் வழங்கும் உதவிகள் அதனை எப்படி பயன்படுத்துவது, கொடிய நோய்களினால் சமீபத்தில் நம் ஊரில் ஏற்பட்ட மரணங்கள் , இவற்றுக்கெல்லாம் உலக காயல் நல மன்றங்கள் ஒன்றிணைந்து உதவிட வேண்டும்.
ஊர் மக்களுக்காக சேவை செய்யும் நல்ல நோக்குடன் காயல் நல மன்றங்கள் பல துவக்கபடுவது பெருமைக்குரிய விஷயம். இப்படி சேவை எண்ணத்துடன் துவங்கிய இம்மன்றம் இறைவன் கிருபையால், பல பயனாளிகளுக்கு பல இலட்சங்கள் வரை உதவிகள் வழங்கியுள்ளதும் இது தனி நபரால் வழங்குவது சாத்தியமன்று. ஏனவே சந்தாவுடன், நன்கொடைதனையும் கூடுதலாக செலுத்துவதோடு, உங்கள் நல்ல பல கருத்துக்களயும் ஆலோசனைகளையும் தாரளமாக வரவேற்கிறோம்.
இது ஒரு வெளிப்படையான நிர்வாகம். ஆகையால் இம்மன்றம் தொய்வில்லாமால் தொடர்ந்து நற்சேவை செய்திட நாம் எல்லோரும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று வேண்டி தனதுரையை நிறைவு செய்தார் மன்றத்தின் மற்றுமொரு செயலாளர் சகோ. எம்.எ. செய்யிது இப்ராஹீம்.
நிதி நிலை அறிக்கை:
உறுப்பினர்களால் இப்போது பெறப்பட்ட சந்தா,நன்கொடைகள் ,வழங்கப்பட்ட உதவி தொகைகள் தற்போதைய இருப்பு போன்ற முழு விபரங்களையும் நிதி நிலை அறிக்கையாக சமர்பித்தார் மன்ற பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம். வந்திருந்த அனைவருக்கும் நிதிநிலை அறிக்கையின் முழு விபரம் அடங்கிய பட்டியலின் நகல் வழங்கப்பட்டது.
இஸ்லாமிய பாடல்:
தன் அழகான குரலால் ஒரு இஸ்லாமிய பாடலை தனது இனிய குரலில் பாடி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் ஹாஜி எனும் சகோ. எம்.ஓ. முஹம்மது நூஹு.
கருத்துரை:
அடுத்து, கருத்துரை வழங்கிய சகோ.ஏ.எம்.செய்யது அஹமது தனதுரையில் நல்ல பல கருத்துகளை தந்ததுடன், KEPA, இக்ரா மற்றும் ஷிபா இவற்றின் சேவைகளையும் பாராட்டியதோடு, நம் இளைய சமுதாயம் சட்டத்துறையில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்றதோடு குறிப்பாக பெண்களுக்கு Self Medication வேண்டவே வேண்டாம், அதனால் உடல் ரீதியாக பல தொல்லைகளை சந்திக்க நேரிடும், டாக்டரின் ஆலோசனையின் பேரிலே மருந்துகள் உண்ண வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
நம் மன்றம் தோன்றி, தொய்வின்றி சேவைகள் தொடர்கிறது அல்ஹம்துலில்லாஹ் ! கல்வி, மருத்துவம் மட்டும் அல்லாது பல சேவைகளை இம்மன்றம் செய்வது என்றால் அது மிகையாகாது, கேஎம்டி மருத்துவமனைக்கு பிளாக் கட்டி கொடுத்தது, சுற்றுப்புற சூழல் என்ற விழிபுணர்ச்சி முகாமை வாவு வஜிஹா கல்லூரிலே நடத்தியது, மற்றும் புற்றுக்கு வைப்போம் முற்று என்ற குறுந்தகடு வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
அண்டை வீட்டார் பசித்திருக்க நாம் உண்டு மகிழ்வது கூடாது, இப்படி நம் மார்க்கம் நமக்கு கற்று தரவில்லை. நாளை இறைவன் நம்மிடம் கேள்வி கேட்பான், உனக்கு நான் செல்வத்தை தந்தேனே, நீ பிறருக்கு என்ன செய்தாய்? என்று இதற்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளர். என்று சில ஹதீஸ்களை மேற்கோள் காட்டி வெகு தொலை தூரமான சுஹைபா ,ராபிக் ,யான்புவிலிருந்து நம் சகோதர்கள் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டதையும் பாராட்டி, இந்த ஆர்வம் நம் எல்லோருக்கும் வரவேண்டும், என்று பேசி தனதுரை நிறைவு செய்தார். சகோ.எஸ்.எச். ஹுமாயூன் கபீர்.
மேலும் மன்ற துணைத்தலைவர் சகோ.மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாது தான் சமீபத்தில் ஊர் சென்று வந்ததும் ஷிபா அலுவலகம் சென்று கலந்தாலோசனை செய்ததும் cancer மற்றும் different disease நம்ம ஊர்லே இப்பம் சமிப காலமா நிறைய நடக்குது, ஷிபா மூலமா நாம் உதவினாலும், இது ஏன் நடக்குது? எதனாலே? என்று நாம் கவனமா பார்க்கணும். நம்ம ஊர்லே என்ன நடக்குது, எப்படி அந்த மக்களுக்கு உதவலாம், என்று நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கணும். என்ற அருமையான கருத்தை தனது ஆங்கிலம் கலந்த தமிழில் எடுத்துரைத்தார்.
நாம் வழங்கும் சந்தாவும், நன்கொடையும் தான் இம்மன்றம் செய்யும் சேவைக்கு பெரும் ஊக்கமாக உறுதுணையாக உள்ளது என்றும் இதில் நாம் அனைவரும் தக்க கவனம் செலுத்தனும் எனவும் தனது கருத்துரையை துணைச்செயலாளர் சகோ.எஸ்.எச். அப்துல் காதர் சொல்லி நிறைவு செய்தார்.
கவிதை:
அதனை அடுத்து சகோ.கவிஞர் ஏ.ஆர்.ஜாகிர் ஹுசைன் இன்றைய மனிதனின் மனம் ( நப்ஸ் )என்ற தலைப்பில் மிக அழகான கவிதை ஒன்றை மிக சுவைப்பட வாசிதது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.
சிறப்பு விருந்தினர்:
அதன் பின் மன்ற ஆலோசகர் சகோ.எம்.எம்.மூஸா சாஹிப் நமத்து அழைப்பினை ஏற்று சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த கீழக்கரை சகோ,பொறியாளர் முஹம்மது இஸ்மாயில் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பற்றி அறிமுக உரை ஆற்றி கொண்டார்.
பிறகு சிறப்பு அழைப்பாளர் சகோ. கீழக்கரை முஹிய்யதீன் சீனி அலி உரை நிகழ்த்தும் பொழுது நானும் உங்களில் ஒருவன் தான் என்ற பேச்சை துவக்கி இந்த மன்றதின் நடவடிக்கைகளை எப்போதும் உற்று நோக்குவதாயும் ஏனெனில் அதுதான் எங்களுக்கு முன்னுதாரணம் தினமும் இணைய தளத்தை திறந்தவுடன் முதலில் பார்ப்பது காயல் செய்திகளைத்தான் இப்போது புற்று நோயால் மரணம் அதிகமாக நிகழ்வதை காண முடிகிறது இதற்கு என்ன காரணம், ஆய்வு செய்ய வேண்டும் எவ்வாறு நாம் அதற்க்கு உதவலாம் நாம் அனைவரும் ஓன்று பட்டு உதவுவோம்.
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக! ஆமீன். என்று கூறி அமர்ந்தார்.
நாம் இம்மன்றம் மூலம் பல பயனாளிகளுக்கு உதவுவதால் அவர்களின் துஆ நமக்கு கிடைக்கிறது. மேலும் நாம் ஒற்றுமையுடன் இருந்து, நம் ஊரின் நலனுக்காக பாடுபடவேண்டும். நமதூர் மக்களின் நலனுக்காக பாடுபடும் KEPA விற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என சகோ.முஹம்மது ஆதம் சுல்தான் பேசினார்.
செயற்குழு கூட்டம் :
நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர்களின் முன்னிலையில் 81-ஆவது செயற்குழு கூட்டம் நடைபெறவும் மன்றத்திற்கு உயர்கல்விக்கான உதவி வேண்டி வந்திருந்த மனுக்களை பள்ளிவாசல் நிர்வாக ஒப்புதலோடு வந்திருந்தவைகளை ஏற்று சரிபார்த்து, வரிசைபடுத்தி கட்டிடடவியல், இயந்திரவியல்,மின்சாரவியல்,கணினி இயல் சார்ந்த பிரிவுகளில்
பொறியியல் கல்வி பயிலும் முதலாமாண்டு 9 நபர்,இரண்டாமாண்டு இருவர்,மூன்றாமாண்டு ஒருவர்,நான்காமாண்டு இருவர், ஆசிரியை கல்வி பயிலும் முதலாமாண்டு இருவர்,பிசியோதெரபி பயிலும் பெண் ஒருவர், முதுநிலை கல்வி பயிலும் இருவர்,இளங்கலை கேட்டரிங் பிரிவு பயிலும் ஒருவர் என ஆக மொத்தம் 20-மாணவ மாணவிகளுக்கு உதவி தொகைகள் அறிவிக்கப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது.
புதிய உறுப்பினர் :
புதிதாய் வருகை தந்துள்ள பத்து சகோதரர்கள் தங்களை உறுப்பினர்களாக மன்றத்தில் இணைந்து உரிய சந்தாக்களை செலுத்தியும் தங்களை பற்றிய சுய அறிமுகமும் செய்தும் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சி அனைத்தையும் அழகுற நெறிப்படுத்திய சகோ.பிரபு எஸ்.ஜே.நூருதீன் நெய்னா நன்றி நவில, சகோ,அல்ஹாபிழ் ஏ.எம்.ஈசா ஜக்கரியா பிரார்த்திக்க 'துஆ' கஃப்பாராவுடன் இனிய இந்நிகழ்வு அறுசுவை இரவு உணவுக்குப்பின் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
விழாவிற்கான ஏற்பாடுகளை சகோ,சோனா ஏ.டி.ஹுசைன் ஹல்லாஜ், சகோ,சட்னி எஸ்.ஏ.கே.முஹம்மது உமர் ஒலியும் நல்ல முறையில் செய்து இருந்தார்கள்.நிகழ்விற்கான அனுசரணைகளை சகோ.எம்.எம்.மூஸா சாஹிப் , சகோ.மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாது மற்றும் சகோதரர்கள் பங்களித்து கொண்டார்கள்.
தகவல்:
எஸ்.ஹெச்.அப்துல்காதர் மற்றும்
சகோ.சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்
புகைப்பட உதவி:
சகோ.எம்.கே.சுல்தான் ஜமாலுதீன்,
காயல் நற்பணி மன்றம் – ஜித்தா
|