காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் அந்நிர்வாகத்தின் சார்பில், இம்மாதம் 21ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (நாளை) 08.00 மணி முதல் 14.00 மணி வரை, எலும்பு - மூட்டு மருத்துவ பரிசோதனை இலவச முகாம் நடைபெறவுள்ளது.
எலும்பு முறிவு, முதுகுத்தண்டு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.ஏ.ஷஃபீர் இம்முகாமில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, ஆலோசனைகள் வழங்கவுள்ளார்.
இம்முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் - ரூபாய் 1,500 மதிப்புள்ள - எலும்பின் வலிமை மற்றும் வைட்டமின் பற்றாக்குறைத் தன்மையைக் கண்டறியும் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படவுள்ளது.
இதுகுறித்த விபரங்கள் அடங்கிய பிரசுரம்:-
இத்தகவலை கே.எம்.டி. மருத்துவமனை மேலாளர் அப்துல் லத்தீஃப் தெரிவித்துள்ளார்.
கே.எம்.டி. மருத்துவமனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |