ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.
ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் உள்ஹிய்யா நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளையால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியின் சார்பில், இவ்வாண்டும் ஒருங்கிணைந்த முறையில் உள்ஹிய்யாவை நிறைவேற்றிட தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மாடு பங்கு ஒன்றுக்கு ரூ.2,500/- என தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பங்கு சேர விரும்புவோர், அலியார் தெருவிலுள்ள அப்பள்ளி அலுவலகத்தில் நேரில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு, அதன் பொறுப்பாளரான காஜா என்பவரை +91 80159 78992 என்ற எண்ணில் தொடர்புகொண்டு கேட்டறியுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.ஷம்சுத்தீன்
தலைவர் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை
ஜாமிஉத் தவ்ஹீத் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) வெளியிடப்பட்ட உள்ஹிய்யா அறிவிப்பு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|