சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி மையம் (Anna Institute of Management), சென்னை - 600028 யில் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் முதல் நிலைத் தேர்வு பயிற்சிக்கு (PRELIMINARY EXAMINATION) மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு 23.11.2014 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறவுள்ள, நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள், தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக வழங்கப்படும்.
அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தின் சார்பாக நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 14.10.2014 ஆகும்.
குறைந்தபட்ச கல்வித் தகுதியாகிய பட்டப்படிப்பு (B.A., B.Sc., B.Com.) மற்றும் தொழிற்படிப்படிப்பான (B.E., MBBS., B.D.S., B.V.Sc., B.Sc(Agri)) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகள் அனைத்தும் முடித்த விண்ணப்பதாரர்கள் கல்வி/வயது/இருப்பிட சான்றுகளின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
குறைந்தப் பட்ச வயது அனைத்து வகுப்பினருக்கும் - 21
அதிகபட்ச வயது இதர வகுப்பினர் - 32
மேற்கண்ட உச்ச வயது வரம்பிலிருந்து கீழ்க்கண்டவர்களுக்கு விலக்களிக்கப்படுகிறது.
ஆதி திராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் - 5 வருடம்
பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் - முஸ்லிம் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சீர் மரபினர் - 3 வருடம்
மாற்று திறனாளிகள் - 10 வருடம்
இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற தமிழ்நாட்டை சார்ந்த மாணவ / மாணவியருக்கு மட்டுமே தகுதி உடையவர் ஆவர். பாண்டிச்சேரி உட்பட்ட இதர மாநிலத்தை சார்ந்த மாணவர்கள் விண்ணப்பங்கள் பெற தகுதியற்றவர்கள்.
விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளன்று 14.10.2014 மாலை 5.45 வரை விண்ணப்பங்கள் பெறப்படும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
1.8.2015இன் நாளின்படி விண்ணப்பங்கள் பெற தகுதியுள்ள மாணவ மாணவியரின் வயது/பிறந்த நாள் விபரம் (as on 01.08.2015)
மாவட்ட ஆட்சித் தலைவர்,
தூத்துக்குடி.
தகவல்:
மாவட்ட ஆட்சியகம், தூத்துக்குடி
|