காயல்பட்டினம் நகராட்சியின் 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிடம் உட்பட - தூத்துககுடி மாவட்டத்தில் வெற்றிடமாக உள்ள அனைத்து
உள்ளாட்சிப் பொறுப்பிடங்களுக்கும் இடைத்தேர்தல் செப்டம்பர் 18 அன்று காலை 7 மணி முதல் மாலை 5
மணி வரை நடைபெற்றது.
வாக்குப்பதிவு அன்று வேட்பாளர்கள் ம.அமலக்கனி மற்றும் எஸ்.ஐ.அஸ்ரஃப்
வாக்குப்பதிவின் நிறைவில் 73.21 சதவீத வாக்குகள் பதிவாகின.
மொத்த வாக்காளர்கள் - 2035
பதிவான வாக்குகள் - 1490 (சதவீதம் - 73.21)
ஆண்கள் பதிவானவை - 634 (மொத்தம் - 978; சதவீதம் - 64.82)
பெண்கள் பதிவானவை - 856 (மொத்தம் - 1057; சதவீதம் - 80.98)
வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் - வாக்குப் பதிவு கருவிகள் சீல் வைக்கப்பட்டு, வேட்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் கையெழுத்து பெறப்பட்டு, பாதுகாப்பாக
- காயல்பட்டினம் நகராட்சிக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
நாளை (செப்டம்பர் 22) காலை 8 மணியளவில் - காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில் - வாக்குகள் எண்ணப்படும் எனத் தெரிகிறது. குறைந்த அளவில் கருவிகள் மூலம் மட்டுமே வாக்குகள் பதிவு
செய்யப்பட்டது என்பதால், சில நிமிடங்களில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முகவர் நியமனம் படிவம் - படிவம் எண் 10
வாக்கு பதிவு முகவர் நியமனம் படிவம் - படிவம் எண் 11
வாக்களித்த வாக்காளர்கள் விபரம் - படிவம் எண் 21
ஆட்சேபனை வாக்குகள் பதிவு படிவம் - படிவம் 22
பதிவான வாக்குகள் விபரம் - படிவம் எண் 23
வாக்கு எண்ணிக்கை முகவர் நியமனம் படிவம் - படிவம் எண் 24
வாக்குகள் எண்ணிக்கை பதிவு செய்யும் படிவம் - படிவம் எண் 25
இறுதி முடிவுகள் பதிவு செய்யும் படிவம் - படிவம் எண் 26
தேர்தல் முடிவு அறிவிப்பு படிவம் - படிவம் எண் 27
புகைப்படங்களில் உதவி:
ஐ.ஆபிதா சேக், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் மற்றும் எம்.ஜஹாங்கிர், வார்டு 5 உறுப்பினர்
[கூடுதல் புகைப்படங்கள் இணைக்கப்பட்டது @ 3:00pm/21.09.2014] |