காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் இயங்குகிறது DCW தொழிற்சாலை. கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 29 அன்று - அதன் விரிவாக்க
திட்டங்கள் குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு முன்னர் - அக்டோபர் 15, 2011 வரையிலான என்று
குறிப்பிடப்பட்டு - சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுள் ஒன்று - தொழிற்சாலையின் சுற்று வட்டார பகுதிகளில் அந்நிறுவனம் செய்ததாக கூறும் சமுதாயப் பொறுப்புப் பணிகள் (CORPORATE SOCIAL RESPONSIBILITY - CSR) குறித்த விபரங்கள்.
101 பணிகளை விவரித்துள்ள அந்த ஆவணங்களில் - அத்தொழிற்சாலை - காயல்பட்டினம், ஆறுமுகநேரி, புன்னக்காயல், சேர்ந்தமங்கலம், ஆத்தூர் உட்பட பல இடங்களில் செய்த பணிகள் என பலவற்றை பட்டியலிட்டுள்ளது.
பெருவாரியான பணிகள் காயல்பட்டினத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டவை என காணமுடிகிறது.
அதில் பொதுப்படையான தகவல்களும் உள்ளன. உதாரணமாக -
*** இலவச மருத்துவ முகாம்கள் சுற்றுவட்டார கிராமங்களில் அடிக்கடி நடத்தப்படுவது
*** தீ விபத்து, வெள்ளம் போன்ற சமயங்களில் உதவிகள் செய்வது
*** தேசிய கால்பந்து, தேசிய பாட்மிண்டன் போட்டிகள் போன்றவைகளுக்கு ரூபாய் 50,000 வரை ஒவ்வொரு ஆண்டும் உதவிபுரிவது
*** அருகாமை பள்ளிக்கூடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்குவது
*** ஒவ்வொரு ஆண்டும் சுமார் 11 கல்லூரிகளுக்கு தொழிற்சாலை வருகை (INDUSTRIAL VISIT) ஏற்பாடு செய்வது
*** பொறியியல் கல்லூரி மாணவர்கள் தொழிற்சாலையில் பயிற்சிகள் மேற்கொள்ள அனுமதிப்பது
*** தீ விபத்துகளின் போது, தீ அணைப்பு வண்டிகள் அனுப்பி உதவி செய்வது
*** இலவச மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்குவது
*** மனிதவள மேம்பாடு தலைப்புகளில், DCW நிர்வாகிகளை அனுப்பி, அருகாமையில் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவது
*** அருகாமையில் உள்ள கிராமத்தினருக்கு கவுன்சிலிங் வசதிகள் செய்து கொடுப்பது
அப்பட்டியலில் - காயல்பட்டினம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டன என குறிப்பிடப்பட்டுள்ள பணிகளின் விபரங்கள் கீழே:
*** காயல்பட்டினம் நகராட்சிக்கு கடற்கரையை அழகுப்படுத்தவும், மேம்படுத்தவும் உதவி செய்வது
*** காயல்பட்டினம் பள்ளிக்கூடத்திற்கு (பள்ளிக்கூடம் பெயர் குறிப்பிடப்படவில்லை) குடிநீர் இணைப்பு வழங்கியது. செலவு ரூபாய் 8250. ஆண்டு - 2009
*** மங்களவாடி நூலகத்திற்கு புத்தகங்கள் வைக்க நூல் அடுக்கம் (BOOK SHELF) வழங்கியது. தொகை - ரூபாய் 9,000. ஜனவரி 2010
*** காயல்பட்டினம் தைக்கா நடுப்பள்ளிக்கு, ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கியது. செலவு - ரூபாய் 15,000. ஜனவரி 2011
*** காயல்பட்டினம் தைக்கா நடுப்பள்ளிக்கு குடிநீர் இணைப்பு வழங்கியது. செலவு ரூபாய் 5000. ஆண்டு ஜனவரி 2011
*** சிங்கித்துறை (கற்புடையார்பள்ளி வட்டம்) கிராமத்தில் குழந்தைகள் கலாச்சார நிகழ்சிகளுக்கு உதவி. செலவு ரூபாய் 5,000
*** சிங்கித்துறை (கற்புடையார்பள்ளி வட்டம்) கிராமத்தில் சமுதாயக்கூடம் 5.5 லட்சம் செலவில் அமைத்தது. ஆண்டு - 2003
*** 800 பெண்கள் பங்கேற்ற குடும்பங்கள் / பெண்கள் மேம்பாடு நிகழ்ச்சி - காயல்பட்டினத்தில் நடத்தியது
அக்டோபர் 15, 2011க்கு முன்னர் வரை என DCW தொழிற்சாலை மேற்கொண்டதாக கூறும் 101 பணிகள் அடங்கிய பட்டியல் - முழு விபரம்
|