காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) தலைவர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு - கோமான் ஜமாஅத்
சார்பாக கடிதம், செப்டம்பர் 15 அன்று அனுப்பப்பட்டிருந்தது.
KEPA சார்பிலான பதில், அவ்வமைப்பின் தலைவர் பெயரில் - செப்டம்பர் 16 அன்று, கோமான் ஜமாஅத் தலைவரிடம் வழங்கப்பட்டது.
மீண்டும் - ஒரு கடிதம், கோமான் ஜமாஅத் சார்பாக, KEPA அமைப்பிற்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் - இணைப்புகளாக, காயல்பட்டணம்.காம் இணையத்தளத்தில் வெளியான
--- 01ஆவது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்! (செய்தி எண். 14439) என்ற தலைப்பிலான செய்தியும்,
--- DCW நிறுவனம் சார்பில் கடையக்குடியில் நலத்திட்ட உதவிகள்! (செய்தி எண். 14452) என்ற தலைப்பிலான் செய்தியும்,
--- உள்ளூர் இணையதளம் ஒன்றில், அமலக்கனியின் வேட்பு மனுத் தாக்கலும் கைப்பேசி உரையாடலும் என்ற தலைப்பில் வெளியான
செய்தியும் இணைக்கப்பட்டுள்ளது.
|