தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், கஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக, ஜும்ஆ தொழுகைக்குப் பின்பும், தெருக்களிலும் நிதி திரட்டுவதென, இம்மாதம் 17ஆம் நாள் 21.00 மணியளவில் - தமுமுக நகர அலுவலகத்தில் - அதன் மாவட்ட துணைச் செயலாளர் கே.முஹ்ஸின் முர்ஷித் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பொறுப்பாளர்களாக,
கே.முஹ்ஸின் முர்ஷித் (தொடர்பு எண்: +91 98421 58232),
எஸ்.டீ.செய்யித் இப்றாஹீம் (தொடர்பு எண்: +91 90426 11658),
ஷாஹுல் ஹமீத் (தொடர்பு எண்: +91 99526 98942)
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வகைக்காக பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் நிதித் தொகை விபரம் குறித்து, முறைப்படி பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
K.முஹ்ஸின் முர்ஷித்
(மாவட்ட துணைச் செயலாளர்)
முர்ஷித் டிஜிட்டல் ஜெராக்ஸ்
தமுமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |