குறைந்த விலையில் உணவு வழங்க அம்மா உணவகங்கள் - சென்னையில் முதலாவதாக துவக்கப்பட்டு, பின்னர் தமிழகத்தில் ஏனைய பகுதிகளில்
விரிவாக்கப்பட்டது. காயல்பட்டினம் உட்பட தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளிலும் அம்மா உணவகம் துவக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா, ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகிலுள்ள - நகராட்சிக்குச் சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு, ஜூலை 6 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள இவ்வுணவகத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்றுவருகின்றன.
தகவல் மற்றும் புகைப்படங்கள்:
தமிழன் முத்து இஸ்மாயில்
2. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[21 September 2014] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37382
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த ''அம்மா உணவகம் '' கண்டிப்பாகவே நமது ஊருக்கு ரொம்பவும் தேவையான ஒன்றே .....நடுத்தர மக்களுக்கும் / நமது ஊருக்கு வெளி பகுதிகளில் இருந்து கலையில் அனைத்து வேலைக்கும் வரகூடிய கஷ்ட பட்ட & வியாபாரிகளுக்கும் கூட அத்தியாவசியமானதே.........
மேலும் இந்த ''அம்மா உணவகதின்'' அனைத்து உணவுகளும் ரொம்பவும் ( தரமனதே ) ருசியானதே ....நான் இந்த உணவை மதுரையிலும் + சென்னையிலும் என் நண்பர்கள் ஒரு சிலர்களுடன் சென்று சாப்பிட்டு உள்ளேன் ....ஆதலால் அந்த ருசியின் தன்மையை உணர்தேன் ........
இந்து போன்ற '' அம்மா உணவகம் '' நமது ஊர் அரசு மருத்துவ மனைக்கும் தேவையானதே .....
3. Re:...ஆன்மிக கனவும் ; அக்னி பாரதியின் posted byEassa Zakkairya (Jeddah)[22 September 2014] IP: 216.*.*.* United States | Comment Reference Number: 37419
ஆன்மிக கனவும் ; அக்னி பாரதியின் கனவும் நிறைவேற போகும் தருணம் இது ; உணவு மனிதனின் நாடி நரம்புகளை ஊடுருவகூடியது ; விருந்தாளி இல்லாமல் உணவு உண்ணாத நபி இப்ராகிம் (அலை) ; பல அகமிய ரகசியங்கள் பொதிந்த உணவு கொடுத்தல் யார் செய்தாலும் அல்லது அதற்க்கு துணையாக இருப்பவர்களுக்கும் இயற்கையின் அருள் உண்டு ;
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross