காயல்பட்டினம் ஜாவியாவில், ஷாதுலிய்யா தரீக்கா ஷெய்குமார்களின் 150ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள் இம்மாதம் 11 துவங்கி 17ஆம் நாள் வரை ஜாவியா வளாகத்தில் நடைபெற்றது.
இந்நாட்களில் அன்றாடம் 20.30 மணி முதல் 21.30 மணி வரை பல்வேறு தலைப்புகளில் மார்க்க அறிஞர்களின் உரைகள் இடம்பெற்றன.
11.09.2014 அன்று, காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வரும், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ - “ஷாதுலிய்யா தரீக்காவின் மாண்புகளும், அதன் ஷெய்குமார்களின் மேன்மைகளும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
12.09.2014 அன்று, “இஜ்மாஉம் ஷரீஅத்தின் ஆதாரமே” எனும் தலைப்பில், மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எம்.அப்துல்லாஹ் மக்கீ காஷிஃபீ ஃபாழில் தேவ்பந்தீ உரையாற்றினார்.
13.09.2014 அன்று, “ஆன்மிகம் - அன்றும், இன்றும்” எனும் தலைப்பில், மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ உரையாற்றினார்.
14.09.2014 அன்று, “வல்ல நாயன் அல்லாஹ்வின் படைப்புகளின் உரிமைகளைப் பேணுவோம்” எனும் தலைப்பில், ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் கே.சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரீ உரையாற்றினார்.
15.09.2014 அன்று, “ஸலவாத்தின் மாண்புகள்” எனும் தலைப்பில், ஐக்கிய சமாதானப் பேரவை தலைவரும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் செயற்குழு உறுப்பினருமான மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ உரையாற்றினார்.
16.09.2014 அன்று, “இஸ்லாமிய இல்லறச் சட்டங்கள்” எனும் தலைப்பில், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ உரையாற்றினார்.
17.09.2014 கந்தூரி நாளன்று 09.00 மணிக்கு திக்ர் ஹல்காவும், அதனைத் தொடர்ந்து யவ்முல் இல்ம் - கல்வி நாள் நிகழ்ச்சியும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ தலைமையிலும், மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.அப்துல் காதிர் முத்துவாப்பா ஃபாஸீ கலீஃபத்துல் குலஃபாயிஷ் ஷாதுலீ முன்னிலையிலும் நடைபெற்றது.
கல்லூரி மாணவர்கள் உரையைத் தொடர்ந்து, ஜாவியா அரபிக்கல்லூரி மற்றும் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் துணை முதல்வரும், மகுதூம் ஜும்ஆ பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எம்.அப்துல்லாஹ் மக்கீ காஷிஃபீ ஃபாழில் தேவ்பந்தீ, ஜாவியா அரபிக்கல்லூரியின் ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.எஸ்.மாமுனா லெப்பை காஷிஃபீ, உள்ளிட்டோர் மார்க்க சொற்பொழிவு உரைகளாற்றினர்.
அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் திக்ர் ஹல்கா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஷாதுலீய்யா தரீக்கா ஷெய்குமார்களின் சரித்திரங்கள் என்ற தலைப்பில், மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ உரையாற்றினார்.
நன்றியுரையைத் தொடர்ந்து, துஆ - ஜலாலாவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடத்தப்பட்ட ஷாதுலிய்யா தரீக்கா ஷெய்குமார்கள் கந்தூரி தொடர்பான விபரங்கள் அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஜாவியா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|