தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 68 வது பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 5 அன்று நடைபெற்றது. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்விற்கே.
அஸ்ஸலாமு அலைக்கும்.
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 68 வது பொதுக்குழு கூட்டம், 05.09.2014 வெள்ளிக்கிழமை மாலை, தம்மாமில் உள்ள ரோஸ்
ரெஸ்டாரண்ட்டில், மன்றத்தின் துனைத் தலைவர் சாளை S.I. ஜியாவுத்தீன் அவர்களின் தலைமையிலும், மன்றத்தின் பொதுச் செயலாளர் ஜனாப்.
அஹமது ரபீக் அவர்களின் முன்னிலையில் நடைபெற்று முடிந்தது. அல்ஹம்து லில்லாஹ்.
இந்த நிகழ்வை சகோதரர் இம்தியாஸ் அவர்கள் நெறிபடுத்த, அவரின் மகன் இளவல் ஷைஹ் ரய்யான் திருக்குர்ஆன் வசனத்தை கிராஅத் ஓதி துவங்கி
வைத்தார். இந்த இறைவசனத்தின் தமிளுரையை இளவல் A யூசுப் வழங்கினார்.
வந்திருந்த அனைவர்களையும் சகோதரர் அஹ்மத் காசிம் அவர்கள் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து மன்றத்தின் துனைத் தலைவர், சகோதரர் சாளை ஜியாவுத்தீன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.
பின்பு, தம்மாம் பகுதிக்கு புதிதாய் வந்துள்ள நம் சகோதரர்களான
M.K.ஹபீப் முஹம்மது, K.B.L.ஹபீப் முஹம்மது, S.I.முஹம்மது அப்துல்லாஹ், கலீல் அஹமது, M.S. அப்துல் காதர் ஜெய்லானி ஆகியோர்
தங்களை கூட்டத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டு மன்றத்தில் இணைந்து கொண்டார்கள்.
இதனைத் தொடர்ந்து சிறுவர்களுக்கான வினாடி வினாப் போட்டியை சகோதரர் பஷீர் அலி அவர்கள் மிகச் சிறப்பாக நடத்தினார். இந்த போட்டி 8
வயதுக்கு அதிகமான / குறைவான பிள்ளைகள் என்று இரு பிரிவாக, இஸ்லாமிய மற்றும் பொது கேள்விகளை கொண்ட போட்டியாக
அமைந்தது.
அடுத்ததாக சகோதரர் மஹ்மூத் நைனா அவர்கள், இனிமையான குரலில் மறைந்த காயல் பிறைக்கொடியான் அவர்களின் இஸ்லாமிய பாடலை பாடி
அனைவர்களையும் கவர்ந்தார்.
இவர்களின் நிகழ்வைத் தொடர்ந்து மன்றத்தின் பொதுச் செயலாளர் ஜனாப் அகமது ரபீக் அவர்களின் உரை அமைந்தது.
இவர்களின் உரையில் மன்றதின் செயல்பாடுகள், அளித்த உதவிகள், இனி நடைபெறப் போகின்ற மன்றத்தின் திட்டங்கள் ஆகியவற்றை
பட்டியலிட்டார்கள். மன்றதின் செயல்பாடுகளில் வீரியமுடன் செயல்படும் சகோதரர்களை பாராட்டி, மற்ற சகோதரர்கள் அனைவர்களும் மன்றதின் நல
செயல்பாடுகளில் அதிகம் பங்கு கொண்டு பல நல்ல செயல்கள் நம் மக்களுக்கு அளித்திட ஒத்துழைப்பு கொடுக்குமாறும் வேண்டிக்கொண்டார்.
இவர்களின் உரையைத் தொடர்ந்து மன்றத்தின் பொருளாளர் சகோதரர் இப்ராஹிம் அவர்கள் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தார்.
அடுத்து, தம்மாம் இஸ்லாமிய அழைப்பகத்தின் மூத்த தாயி மௌலவி நூஹுமஹ்லரி அவர்களின் இஸ்லாமிய உரை அனைவர்களுக்கும்
உபயோகமான முறையில் அமைந்து இருந்தது.
இவர்களின் உரையில் நவீன தொலைதொடர்பு சாதனங்கள், சமூக தளங்கள் போன்றவற்றை எப்படி உபயோகமான முறையில் பயன் படுத்துவது,
கல்வி, ஒழுக்கம் பேணுதல் போன்ற நல்ல உபதேசங்களை அவர்களுக்கு உரிய பாணியில் அமைத்து இருந்தது.
பின்பு, வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
எட்டு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கான போட்டியில்
முதல் பரிசை இளவல் அதாவுல்லாஹ் அவர்களும்,
ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்ற இளவல்கள் ஷைஹ் ரய்யான், அன்வர் சயீத் ஆகியோர் இரண்டாம் பரிசையும்
மூன்றாம் பரிசை இளவல் A . யூசுப் அவர்களும் பெற்றார்கள்.
இவர்களுக்கு மன்றத்தின் பொதுச் செயலாளர் ஜனாப் அஹ்மது ரபீக் அவர்கள் வழங்கினார்கள்.
எட்டு வயதுக்குள் உள்ள போட்டியில்
முதல் பரிசை குழந்தை மரியம் ஹிபா அவர்களும்
இரண்டாம் பரிசை குழந்தை ஆயிஷா நஹீலா அவர்களும்
மூன்றாம் பரிசை குழந்தை பாத்திமா அவர்களும் பெற்றார்கள்.
இவர்களுக்கான பரிசை மௌலவி நூஹு மஹ்லரி அவர்கள் வழங்கினார்கள்.
போட்டியில் பங்கு பெற்ற அனைவர்களுக்கும் மற்றும் குலுக்கல் முறையில் வந்து இருந்த உறுப்பினர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த
பரிசுகளை மன்றத்தின் துணைத் தலைவர் சாளை ஜியாவுத்தீன் அவர்கள் வழங்கினார்கள்.
இந்த நிகழ்வு அருமையாக அமைத்து தந்த வல்ல அல்லாஹ் விற்கும், மன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் அனைவர்களுக்கும் நன்றி கூறினார்
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சகோதரர் P.S. ஷைஹ் நூர்தீன் அவர்கள்.
இறுதியில் அனைவர்களுக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டு நிகழ்வுகள் அனைத்தும் மிக அருமையாக அமைந்தன. அல்ஹம்து லில்லாஹ்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை S.I.ஜியாவுத்தீன்,
துணைத் தலைவர்.
|