காயல்பட்டினம் கற்புடையார்பள்ளிவட்டத்தில் (சிங்கித்துறை) உள்ள பழுதடைந்த சமூக நலக்கூடம் சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் சீரமைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சிங்கித்துறை பங்குத்தந்தை சேவியர் ஜார்ஜ், ஊர் கமிட்டித் தலைவர் சேவியர், டிசிடபிள்யூ நிர்வாக உதவித் தலைவர் (பணியகம்)
ஆர்.ஜெயக்குமார், நிர்வாக உதவித் தலைவர் (குளோர் அல்கலி) சுபாஷ் டாண்டன், மனிதவளத் துறை பொதுமேலாளர் பசுபதி, அரிமா சங்க
நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், பொன்சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சாகுபுரத்தில் ஆன்மா அமைப்பின் 15ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு, ஆன்மா தொண்டு நிறுவனத் தலைவர் ஜே. பொன்சரவணன் தலைமை வகித்தார். செயலர் எம். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக டிசிடபிள்யூ நிறுவன மூத்த பொது மேலாளர் (வளர்ச்சி) சுந்தர் மற்றும் பொதுமேலாளர் (உப்பு) முருகேசன் ஆகியோர்
கலந்துகொண்டு வாழ்த்துப் பேசினர்.
நிகழ்ச்சியில் சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், அருண்குமார், கதிர்வேல், இராம சுப்பிரமணியன்,
ஜோன்ஸ், மாசிலாமணி, நாகபூஷன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். வியாகுலம் நன்றி கூறினார்.
தகவல்:
தினமணி
|