காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் செயல்புரியும் DCW தொழிற்சாலை ஆலை கழிவுகளால் நிலத்தடி நீர் நிறம் மாறியுள்ளதாக மாலை முரசு
மாலை நாளிதழின் சென்னை பதிப்பு நேற்று (செப்டம்பர் 12) செய்தி வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி ஆட்சியகத்தில் ஜூலை 14 அன்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஆறுமுகநேரி ஐக்கிய உப்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில்
தலைவர் கணேஷ்பெருமாள் தலைமையில் உப்பு உற்பத்தியாளர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.
அதில் -
டிசிடபிள்யூ ஆலை நிர்வாகம், கழிவு நீரால் அருகில் 12 கிமீ சுற்றளவு உப்பளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மண்ணின் நிறமே மாறிவிட்டது. மண்ணின்
தன்மை மாறி, உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உப்பளங்களை நம்பி வாழும் தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களின்
வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் மாசுகட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்கவில்லை. எனவே, ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்
என்றும் தெரிவித்திருந்தனர்.
அதனை தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி கிளை சுற்றுச்சூழல் பொறியாளர் கோகுல் தாஸ், சில
நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி தொழிற்சாலைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஒரு மாத காலத்தில் அது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால்,
அதற்கு உரித்த சட்ட விதிகள் படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், இது வரையில் நடவடிக்கை எடுக்கப்படாததால், ஐக்கிய உப்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் மீண்டும் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்த செய்தி மாலை முரசு மாலை நாளிதழின் சென்னை பதிப்பில் நேற்று (செப்டம்பர் 12) வெளியானது.
|