Re:...உழைப்பால் உயர்ந்தவர் பொது சேவையால் மக்கள் மனங்களை கவர்ந்தவர் posted bymackie noohuthambi (chennai)[17 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37316
அது ஒரு பொட்டல்காடு. அந்த பாதையில் பயணம் செய்தால் பாலைவனத்தில் ஒரு பசுந்தரைபோல் தென்படும் ஊர் பெயர் பெட்டைக்குளம். இலங்கையில் தலைநகர் கொழும்பில் பழைய சோனக தெரு என்ற முஸ்லிம்கள் அதிகம் தொழில் செய்யும் அதுவும் நெல்லை மாவட்டம் உடன்குடி பகுதி வியாபாரிகள் சூழ்ந்து இருக்கும் இடத்தில பிரபல தேயிலை வியாபாரியாக கொடி கட்டிப் பறந்த V.M.CADER MEERA SAHIB கம்பெனி - காவன்னா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட - எங்கள் தந்தையின் நட்பின் இறுக்கத்தில் இணைந்தவர்.
அவர்களின் அருமை மகளை கரம் பிடித்த ஜமாலுத்தீன் அவர்கள் அந்த குடும்பத்தின் ஒரு மாணிக்கமாக ஒளி வீசிக் கொண்டு தனது இல்லற வாழ்க்கையை ஆரம்பித்த காலத்தில் இருந்து, அவர் நடந்த பாதை எல்லாம் அவருக்கு செங்கம்பள வரவேற்பு - அவர் கால் பட்ட இடமெல்லாம் மலரானது - அவர் கை பட்ட பொருளெல்லாம் பொன்னானது. அவர் எடுத்து வைத்த அடிகள் எல்லாமே சிறப்பாக அமைந்திருந்தது.
மெல்ல மெல்ல பொதுவாழ்க்கையை நோக்கி அவரது பயணம் திரும்பியது. சமுதாய முன்னேற்றம் - ஏழை எளியவர்களின் நல்வாழ்வு - கல்வி வளர்ச்சியில் பின்தங்கி இருப்பவர்களை உயரே தூக்கி விடுவது போன்ற விஷயங்களில் அவர் கவனம் திரும்பியபோது மக்களின் உள்ளங்கள் அவரது கடைக் கண் பார்வைக்காக ஏங்கியது. அரசியல் பிரமுகர்கள் இவரது விரல் அசைவுக்கு இசைவு அளித்தபோது அதை சமுதாயத்துக்கு நன்மைகள் செய்யும் பக்கத்துக்கு அவற்றை பயன்படுத்திக் கொள்ள அவர் தவறியதில்லை.
அவர் வகித்த உயர் பதவிகள் எல்லாம் இவரால் உயிர் பெற்றது. அப்படிப் பட்டவர் காயல்பட்டினம் திருமணங்களில் விசேஷங்களில் தவறாமல் கலந்து கொள்வார்கள். என் தந்தை மக்கி ஆலிம் அவர்கள் மீது அவருக்கு அளப்பரிய அன்பு மரியாதை. எவ்வளவு பரபரப்புடன் காணப்பட்டாலும் என் தந்தை அவர்களை சந்திக்க எங்கள் வீட்டுக்கே வந்து அவர்கள் நலம் விசாரித்துவிட்டு, அவர்கள் து ஆ க்களை பெற்றுக் கொண்டு ஊர் திரும்புவார்கள்.
உழைப்பால் உயர்ந்தவர் - அன்பு கருணை மிக்கவர்....அவர்கள் ஜனாஸாவை பார்க்கும் பாக்கியம் நான் சென்னையில் இருப்பதால் கிட்டியது. ஒரு மாபெரும் தலைவரை சந்திக்க வருவது போல் அவரது ஜனாஸாவை பார்க்க கூட்டம் நிரம்பி வழிந்தது - சென்னை எழும்பூர் pantheon சாலை. எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல அமல்களை பொருந்திக் கொள்வானாக. குறை குற்றங்களை மன்னித்து அருள்வானாக.
அவர்கள் மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக. மேலான் சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக. ஒரு கண்ணியம் மிக்க குடும்ப தலைவரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக. அவர்கள் விட்டு சென்ற நற்பணிகள் தொய்வில்லாமல் நடந்தேற அவர்கள் மக்களுக்கு நல்லருள் புரிவானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross